world

img

தீக்கதிர் உலக செய்திகள்

“ஆபத்தான புதிய அணு ஆயுத யுகம்”  டொனால்டு டிரம்பின் அணுகுமுறை குறித்து  நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர் குழு எச்சரிக்கை!

நியூயார்க், மார்ச் 12- உலகம் ஒரு புதிய மற்றும் மிகவும் ஆபத்தான அணு ஆயுத யுகத்திற்குள் (Dangerous new nuclear age) நுழைந்து கொண்டிருப்பதாகவும், இந்தச் சூழலை எதிர்கொள்ளும் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் அணுகுமுறை மிகவும் கவ லைக்குரியதாக இருப்பதாகவும் ‘நியூயார்க்  டைம்ஸ்’ இதழின் ஆசிரியர் குழு எச்ச ரித்துள்ளது. கட்டுப்பாடற்ற  அணு ஆயுதப் போட்டி பனிப்போர் காலத்திற்குப் பிறகு, அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட சர்வதேச ஒப்பந் தங்கள் ஒவ்வொன்றாகச் சிதைந்து வரும் நிலையில், உலகம் தற்போது “கட்டுப்பாடு களற்ற ஒரு யுகத்தை” (Unbound era) நோக்கி நகர்ந்து வருவதாக ஆசிரியர் குழு சுட்டிக்காட்டியுள்ளது. ஈரான் மீதானத் தாக்குதல்கள் மற்றும் ரஷ்யா-சீனா உடனா னப் பதற்றங்களுக்கு மத்தியில், அணு ஆயு தங்களின் பயன்பாடு குறித்த அச்சம் மீண்டும் உலக நாடுகளிடையே மேலோங்கி யுள்ளது. டிரம்ப்பின் “அதிர்ச்சியூட்டும்” அணுகுமுறை இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கையாளும் விதம் குறித்து ஆசிரியர் குழு தனது கட்டு ரையில் கடும் கவலைகளைப் பதிவு செய்துள்ளது. “இந்த புதிய யுகத்தை எதிர்கொள்ளும் டிரம்ப்பின் அணுகுமுறை அவரது வார்த்தைகளிலும், அவர் கையா ளும் முறைகளிலும் (Mechanics) ஒரே நேரத்தில் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது” என்று அந்த இதழ் சாடியுள்ளது. அணு ஆயுதங்களை ஒரு மிரட்டல் கரு வியாகப் பயன்படுத்துவதும், ராஜதந்திரப் பேச்சுகளுக்குப் பதிலாக ராணுவ வலிமை யைப் பறைசாற்றும் விதமான கருத்துகளை வெளியிடுவதும் நிலைமையை மேலும் மோசமாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அணு ஆயுதக் கட்டுப்பாட்டு விவகாரங்களில் டிரம்ப் காட்டும் அலட்சியம் மற்றும் பொறுப்பற்றப் பேச்சு கள் உலக நாடுகளை ஒரு பாதுகாப்பற்றச் சூழலுக்குத் தள்ளுவதாக ஆசிரியர் குழு விமர்சித்துள்ளது. உலகப் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்டுள்ள சவால் ஒரு காலத்தில் அணு ஆயுதப் பரவலைத் தடுக்க அமெரிக்கா தலைமையேற்று நடத்தியப் போராட்டங்கள், தற்போது டிரம்ப்பின் நிர்வாகத்தால் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. அணு ஆயுதக் கட்ட மைப்பை நவீனப்படுத்துதல் என்ற பெயரில் பல பில்லியன் டாலர்களைச் செலவிடு வதும், மற்ற நாடுகளுடனானப் பேச்சு வார்த்தைகளைப் புறக்கணிப்பதும் நீண்ட கால அடிப்படையில் உலகை ஒரு பேரழிவுப் போருக்கு இட்டுச் செல்லும் என நியூயார்க்  டைம்ஸ் எச்சரித்துள்ளது.

இஸ்ரேலின் ரேடார் கட்டமைப்பு சிதைவு ஹிஸ்புல்லாவுடன் இணைந்து ஈரான் 41 ஆவது அலை தாக்குதல்

டெஹ்ரான், மார்ச் 12- இஸ்ரேலின் ரேடார் பாதுகாப்பு கட்டமைப்பு களைச் செயலிழக்கச் செய்துள்ள ஈரான் ராணு வம் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு டன் இணைந்து ‘ட்ரூ பிராமிஸ்-4’ (Operation True Promise 4) தாக்குதல் நடவடிக்கையின் 40- ஆவது அலை தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி தாக்குதலை ஈரான் கொடுத்து வருகிறது. போர் மூன்றாவது வாரத்துக்குள் நுழையும் நிலையில் இஸ்ரேலும் அமெரிக்காவும் எதிர்பார்க்காத வகையில் மிகக்கடுமையான பதில் தாக்குதலை கொடுத்து வருகிறது என போர் தொடர்பான சர்வ தேச அரசியல் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். ரேடார் முடக்கம் ஈரான் தாக்குதல்கள் இஸ்ரேலின் பாதுகாப்பு அரணாகக் கருதப்படும் ரேடார் வலைப்பின்னலின் முக்கியப் பகுதிகள் ஈரானால் அழிக்கப்பட்டுள்ளன. இது குறித்துப் பேசிய ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் அக்ரா மினியா, “இஸ்ரேலின் ரேடார் அமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளதால் , மிக முக்கியமான இலக்கு களைத் தாக்குவது முன்பை விட இப்போது எளி தாகியுள்ளது. எங்களின் டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிக துல்லியமாக மாறி வருகின்றன,” என்று தெரிவித்துள்ளார். புரட்சிகர காவல்படை (IRGC) மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஒருங்கிணைந்து நடத்திய இந்த 40 ஆவது அலை தாக்குதல், சுமார் 5 மணிநேரம் இடைவிடாமல் நீடித்தது. கத்ர்,  எமாத், கைபர் ஷெக்கன் மற்றும் ஃபத்தாஹ் ஆகிய அதிநவீன ஏவுகணைகளுடன், ஹிஸ்புல்லா அமைப்பின் நூற்றுக்கணக்கான டிரோன்களும் இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டன. குறிவைக்கப்பட்ட முக்கிய இடங்கள் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் அருகே  உள்ள பால்மாச்சிம்  ஏவுகணை சோதனை மற்றும் செயற்கைக்கோள் தளத்தின் கட்டுப்பாட்டு கோபு ரம் மற்றும் ஓடுதளங்கள் சேதமடைந்துள்ளன. அமெரிக்க போர் விமானங்கள் நிறுத்தப்படும் இஸ்ரேல் விமானப்படையின் முக்கிய பயிற்சித் தளமான ஓவ்தா ஈரான் டிரோன்களால் தாக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் உள்நாட்டுப் பாது காப்பின் இதயமாகக் கருதப்படும்  சின் பெட் தலைமையகம் மீது நேரடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இப்போரில் முதன்முறை யாக ஏய்லாட் நகரை ஈரானின்  ஏவுகணைகள் தாக்கியுள்ளன.  அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் இஸ்ரேலை போலவே  அமெரிக்காவும் ஈரானிடம்  பலத்த அடி வாங்கியுள்ளது. ஜோர்டா னில் உள்ள அல்-அஸ்ராக் மற்றும் சவூதி அரேபி யாவில் உள்ள அல்-கர்ஜ் போன்ற அமெரிக்க ராணுவத் தளங்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.  இதற்கு முந்தைய 38 மற்றும் 39 ஆவது அலை தாக்குதல்களில் குவைத்தில் உள்ள அல்-அதிரி ஹெலிகாப்டர் தளம் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5 ஆவது கடற்படைப் பிரிவு (Fifth Fleet) தளங்கள் தாக்கு தலுக்கு உள்ளாகின.இத்தாக்குதலில் நூற்றுக் கணக்கான அமெரிக்க வீரர்கள் காயமடைந்த தாகத் கூறப்பட்டது.