world

img

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி சர்கோஸிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை!

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோஸிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இன்று பாரீஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபிக்கு ஆதரவாக சர்வதேச அரங்குகளில் பேச சர்கோஸி முன்வந்ததாகவும், அதற்காக கடந்த 2007-ஆம் ஆண்டு பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு, கடாபியிடம் இருந்து சர்கோஸி நிதி பெற்றதாகவும் எழுந்த குற்றச்சாட்டு நீதிமன்ற விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நிகோலஸ் சர்கோஸிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் யூரோ அபராதமும் விதித்து இன்று பாரீஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சர்கோஸி மேல்முறையீடு செய்தாலும், அவர் சிறையில் இருந்து கொண்டு தான் மேல்முறையீடு செய்ய முடியும் என்று நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.