world

img

நேபாளத்தில் வாக்களிக்கும் வயது 16ஆக குறைப்பு!

நேபாளத்தில் வாக்களிக்கும் வயது 18இல் இருந்து 16ஆக குறைத்து அந்நாட்டின் இடைக்கால பிரதமர் சுசிலா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, ஊழலுக்கு எதிராக செப்டம்பர் 5ஆம் தேதி Gen Z தலைமுறை இளைஞர்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். அந்தப் போராட்டம் வன்முறையாக மாறியதால், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட அரசு கட்டிடங்கள், பிரதமர் மற்றும் அதிகாரிகளின் இல்லங்கள் தீக்கிரையாகின.
போராட்டம் எல்லை மீறிய நிலையில், பிரதமர் கே.பி. சர்மா ஒலி ராஜினாமா செய்தார். தொடர்ந்து ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் பதவியிலிருந்து விலகினர். இதனால் அந்நாட்டில் ஆட்சி கவிழ்ந்தது.
இந்நிலையில், 2026 மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, நேபாளத்தில் வாக்களிக்கும் வயதை 18 இலிருந்து 16 ஆக குறைக்கும் அறிவிப்பை இடைக்கால பிரதமர் சுசிலா வெளியிட்டுள்ளார்.