world

img

நேபாளத்தில் ஆட்சி: கூட்டணி மாறுகிறது

காத்மாண்டு,ஜூலை 3- நேபாளத்தில் 32 நாடாளுமன்ற இடங்களை வென்றிருந்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) யின்  புஷ்ப கமல் தஹால் (எ) பிரச்சந்தா, 78 இடங்களை வென்றி ருந்த  முன்னாள் பிரதமர் கே.பி. ஒலி தலைமை யிலான நேபாள கம்யூனிஸ்ட் (ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்திருந்தார். 

இந்நிலையில் தொடர்ந்து ஏற்பட்டு வந்த முரண்பாடுகளின் காரணமாக தற்போது கே.பி. ஒலி, தமது கட்சிக்கு கொடுத்து வரும் ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டு நேபாள காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நேபா ளத்தின் நாடாளுமன்ற தேர்தலில் மிகப் பெரிய கட்சிகளான நேபாள காங்கிரஸ் 89 இடங்களில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தது; எனினும் ஆட்சி அமைக்க தேவையான 138 இடங்கள் என்ற பெரும்பான்மை இல்லாததால் 32 இடங்களைப் பெற்றிருந்த நேபாள கம்யூ னிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட் மையம்) மற்றும் சில சிறிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க திட்டமிடப்பட்டது.   

தனது ஆதரவின்றி நேபாள காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாது என்பதால் பிரதமர் பதவி யைப் பெற பிரச்சந்தா முயற்சித்து வந்த சூழ லில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சித் (ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) தலைவர் கே.பி.ஒலி  பிரதமர் பதவியை சுழற்சி முறையில் பரிமாறிக் கொள்ளலாம் என ஆலோசனையை முன் வைத்து இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சி அமைத்தன. இந்நிலை யில், இருகட்சிகளுக்கும் ஏற்பட்ட முரண் பாட்டின் காரணமாக கே.பி.ஒலி, தமது கட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை திரும்பப் பெற்று விட்டார்.

தற்போது நேபாள காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க ஒப்பந்தம் போட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கூட்டணி 167 எம்.பி,க்க ளுடன் - அதிக பெரும்பான்மையுடன் உள்ளன. இந்த சூழலில் பிரச்சந்தா பதவி விலகாமல் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றரை ஆண்டுகாலம்  பிரதமராக இருந்து வரும் பிரச்சந்தா, இதுவரை 3 முறை நம்பிக்கை  வாக்கெடுப்பு கோரி உள்ளார்.  நேபாள அரசியல மைப்பு சட்டப்படி, நம்பிக்கை வாக்கெடுப்பு கோர பிரதமருக்கு 30 நாட்கள் கால அவகா சம் உள்ளது. அதற்குள்  ஏதேனும் புதிய அரசி யல் ஒப்பந்தங்கள் ஏற்பட்டால் புதிய அரசு அமைவதை தடுக்க முடியும் என கூறப் பட்டுள்ளது.

;