சூடானில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரு கிராமமே மண்ணில் புதைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூடான் நாட்டின் டார்பர் மலைப்பகுதியில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு கனமழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளார்.
உள்நாட்டு போர் காரணமாக மக்கள் மலை கிராமத்தில் தஞ்சம் அடைந்திருந்த நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டு ஒரு கிராமமே புதைந்துள்ளது.
மீட்பு பணிகளுக்கு ஐ.நா மற்றும் சர்வதேச அமைப்புகளிடம் உதவி கோரப்பட்டுள்ளது. தொடரும் உள்நாட்டுப் போரும், தடைச் சூழலும் மீட்பு நடவடிக்கைகளை கடுமையாக பாதித்துள்ளன.
இது, சமீப காலங்களில் சுடானில் ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கை பேரழிவாகக் கருதப்படுகிறது.