world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ஈரான் ஏவுகணை: டிரம்ப்பின் புகாரை மறுத்த அமெ. உளவுத்துறை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஈரான் விரைவில் அமெரிக்காவைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளைத் தயாரித்து வருவதாகக் கூறியிருந்தார். ஆனால், அவரது இந்தக் கூற்றை அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் ஆதரிக்கவில்லை. இது மிகைப்படுத்தப்பட்ட தகவல் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். ஈரானின் வசதிகள் சேதமடைந்துள்ளதாலும், ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் வாகனங்களை உருவாக்க வேண்டியிருப்பதாலும், ஈரான் வெகு ரக ஏவுகணைகளை உருவாக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்று அவர்கள் விளக்கியுள்ளனர்.

பாலஸ்தீன சிறுவனைச் சுட்டுக்கொன்ற இஸ்ரேலியப் படைகள்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய ராணுவத் தாக்குதலின் போது, 14 வயது பாலஸ்தீன சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்டார். முகாமில் நடந்த இந்த நடவடிக்கையின் போது, அந்த சிறுவன் மிக நெருக்கமான தூரத்திலிருந்து சுடப்பட்டதாக பிபிசி (BBC) விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுவன் ரத்தம் வெளியேறி உயிரிழக்கும் வரை இஸ்ரேலியப் படைகள் அந்த இடத்திலேயே நின்று வேடிக்கை பார்த்ததாக வீடியோ ஆதாரங்கள் மற்றும் நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா-அமெ. வர்த்தக ஒப்பந்தம் மறுசீரமைக்கப்படலாம்: பியூஷ் கோயல்

குறிப்பிட்ட நாடுகளுக்கு எதிராக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் விதித்த வரிகளை அமெரிக்க உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதன் காரணமாகச் சூழல்கள் மாறினால், அமெரிக்காவுடன் முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா “மறுசீரமைக்கும்” என்று ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஒரு வர்த்தக ஒப்பந்தம் என்பது வரிகளைப் பற்றியது மட்டுமல்ல, அதில் பல கூறுகள் உள்ளன என்றும், சூழலுக்கு ஏற்ப அது சமநிலைப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.