world

img

சீனா: கனமழை, வெள்ளத்தில் 8 லட்சம் பேர்  பாதிப்பு

சீனாவின் ஜியாங்சியில் திங்களன்று பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சீனாவில் கடந்த மே 28 முதல் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக, மாகாணத்தின் 80 மாவட்டங்களில் பேரழிவை ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை 76,300 ஹெக்டேர் விளைநிலங்கள் சேதமாகியுள்ளதாகவும், 1.16 பில்லியன் யுவான் (சுமார் 174 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) நேரடிப் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக மாகாண வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் வறட்சி நிவாரணத் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையில், சீனாவில் திங்களன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவுக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹுனான், ஜியாங்சி, குவாங்சி, குவாங்டாங், புஜியான், தைவான், யுனான் மற்றும் லியோனிங் ஆகிய பகுதிகளில் 2 நாள்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், இடியுடன் கூடிய மழையும் சில இடங்களில் 180 மி.மீ மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட சாலைகளில் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் செயல்படுத்தவும், தண்ணீர் தேங்கிய பகுதிகளில் போக்குவரத்தை வழிநடத்தவும், உள்ளூர் அரசுக்கு மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும், மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றவும், நகரங்கள், விவசாய நிலங்களில் வடிகால் அமைப்புகளை சரிபார்க்கவும் பரிந்துரைத்தது. 

;