உத்தரகாண்டில் உள்ள கிராமம் ஒன்றில் மேகவெடிப்பு என சொல்லப்படக்கூடிய குறிப்பிட்ட இடமொன்றில் மொத்தமாக கனமழை கொட்டித்தீர்த்ததால் அதில் சிக்கியுள்ள கிராம மக்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரகாண்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நைனிடால் மாவட்டத்தில் உள்ள ராம்கார்க் கிராமத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கனமழை ஏற்பட்டதன் காணமாக இடிபாடுகளில் கிராம மக்கள் சிக்கி உள்ளதால் கிராம மக்களை மீட்க போலீசார், மாவட்ட நிர்வாகம் மற்றும் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.
அதனை தொடந்து சிம்கல் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் கட்டுமான பணிக்காக கூடாரத்தில் தங்கியிருந்த நேபாளத்தை சேர்ந்த இரு தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பலியாகினர்.
மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்மழை காரணமாக, கேதார்நாத், பத்ரிநாத் கோவில்களுக்கு செல்ல ஹரித்வார், ரிஷிகேஷ் வந்துள்ள பக்தர்கள் பயணம் மேற்கொள்ள தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.