world

img

சீன தொழில்நுட்ப உதவியால் இந்தோனேசியாவில் புல்லட் ரயில்

ஜகார்த்தா,அக்.3- சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக அதிவேக புல்லட் ரயில் சேவையை அக்டோபர் 2 அன்று இந்தோனேசியா துவங்கியுள்ளது. இதன் மூலம் சீன தொழில்நுட்ப உதவியுடன் அதிவேக ரயில் பாதை அமைத்த முதல் தென்கிழக்கு ஆசிய நாடாக இந்தோனேசியா உள்ளது. ஹூஷ்  என்று பெயரிடப்பட்ட புல்லட் ரயில் 600 பயணிகளு டன் அதிகபட்சம் 350 கி.மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இந்த ரயில் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து  பாண்டுங்கிற்கு 45 நிமிடங்களில் பயணிக்கும்  அதிக மக்கள்தொகை கொண்ட இந்தோனேசிய தீவான ஜாவாவில் உள்ள இரு நகரங்களுக்கு இடையே விரைவான பயணத்தை வழங்கும் இந்த திட்டத்தை இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ வரவேற்றுள்ளார். 500 கோடி டாலர் முதலீட்டில் 2019 ஆம் ஆண்டு துவங் கப்பட இருந்த இந்த திட்டம் கட்டுமான சிக்கல்கள் மற்றும் கொரோனாவின் காரணமாக 2023ஆம் ஆண்டுவரை 700 கோடி அமெரிக்க டாலர் முதலீட்டில்  தாமதமாக உருவாக்கப்பட்டுள் ளது. சீன-இந்தோனேசிய கூட்டு முயற்சியில் நான்கு இந்தோனேசிய அரசு நிறுவனங்கள் மற்றும் பெய்ஜிங்கின் சீன ரயில்வே இன்டர்நேஷனல் இணைந்து இந்த சேவையை உருவாக்கியுள்ளன.