ரஷியாவில் விமானம் விபத்துக்குள்ளாகி 48 பேர் பலியானதால், அந்நாட்டின் கிழக்கு மாகாணங்களில் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவில் டின்டா விமான நிலையத்தை நோக்கி 5 குழந்தைகள் உள்பட 42 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் பயணித்த, அங்காரா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று ஜூலை 24 அன்று வனப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், அந்த விமானத்தில் பயணித்த 48 பேரும் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், விபத்தில் பலியானோருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அமூர் ஒப்லாஸ்ட் மற்றும் கரோவ்ஸ்க் ஆகிய மாகாணங்களில் இன்று முதல் ஜூலை 27-ஆம் தேதி வரை துக்கம் அனுசரிக்கப்பட்டு, அந்நாட்டின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.