பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கப் போவதாக பிரான்ஸ் அறிவிப்பு
பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கப் போவதாக பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளார். இதற்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தை நாடாக இந்தியா உட்பட பல நாடுகள் பல ஆண்டுகளுக்கு முன்பே அங்கீகரித்துள்ள நிலையில் தற்போதுதான் பிரான்ஸ் அந்த முடிவுக்கு வந்துள்ளது. ஐ.நா அவையின் 80 ஆவது அமர்வுக்கு முன்னர் இந்த அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் மக்ரோன் தெரிவித்துள்ளார்.\
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் உருவாக்க ஒப்பந்தம்]
நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக பிரிட்டனும் ஆஸ்திரேலியாவும் அறிவித்துள் ளன. அமெரிக்காவின் அணுசக்தி தொழில்நுட் பத்தில் இயங்கி வருகின்ற ஆஸ்திரேலியாவின் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பை ஆதரிக்கும் வகையில் சுமார் 50 ஆண்டு காலத்திற்கான ஒப்பந்தத்தில் இந்த நாடுகள் கையெழுத்திட உள்ளன. இதற்காக பிரிட்டன் பாதுகாப்புத்துறை மற்றும் வெளியு றவுத் துறை செயலாளர்கள் ஆஸ்திரேலியா சென்றுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவுடன் வளரும் ஆபத்துக்களை கட்டுப்படுத்த வேண்டும்
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியுடன் இணைந்து உருவாகும் ஆபத்து க்களை கட்டுப்படுத்த வேண்டும் என ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் எச்சரித்துள்ளார். மேலும் வங்கிகளின் பாதுகாப்பு அம்சங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் முறியடிப்பது. தனி நபர்களின் அடையாளத் திருட்டு, இணைய மோசடி, போலிச் செய்திகள் போன்ற விஷயங் கள் அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. எனவே அரசு, தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மக்கள் அனைவரும் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார்.
சைபர் குற்றம் : கம்போடியாவில் 105 இந்தியர்கள் கைது
கம்போடியாவில் சைபர் மோசடி குற்றச் சாட்டில் ஈடுபட்டதாக 105 இந்தியர்கள், 606 பெண்கள் உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த 3,075 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையின் சோதனைகளின் போது கணினிகள், மடிக்கணினிகள், மொபைல் போன்கள் உள்ளிட்டவை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15 நாட்களில் 138 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
உக்ரைனுக்குச் செல்லும் அமெரிக்கா ஆயுதங்கள்
உக்ரைன் தனது கூட்டணி நாடுகளிடம் இருந்து மூன்று பேட்ரியாட் வான் பாது காப்பு ஏவுகணை அமைப்புகளை வாங்குவதாக உறுதிப்படுத்தியுள்ளது. இரண்டு அமைப்புகள் ஜெர்மனியிடமிருந்தும் ஒரு அமைப்பு நார்வே யிடமிருந்தும் வருவதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. மேலும் 7 அமைப்புகளை பெறுவ தற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக வும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரி வித்துள்ளார். இந்த ஆயுதங்களை ஐரோப் பிய நாடுகள் அமெரிக்காவிடம் வாங்கி உக்ரைனுக்கு கொடுப்பது குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்து - கம்போடியா எல்லைப் பிரச்சனை : இரண்டாவது நாளாக ராணுவ மோதல்
பாங்காக்,நாம்பென், ஜூலை 24- தாய்லாந்து, கம்போடியா நாடுகளுக்கு இடை யேயான எல்லைப் பிரச்சனையால் ஏற்பட்ட ராணுவ மோதல் இரண்டாவது நாளாகவும் தொடர்ந்துள் ளது. இந்த மோதலில் பொது மக்கள் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். எல்லைப் பிரச்சனை தொடர்பாக கடந்த சில வாரங்களாகவே இரு நாடுகளுக்கும் இடையே உறவுகள் மிகவும் மோசமடைந்து வந்த நிலை யில் ஜூலை 23 வியாழனன்று காலை இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்தவுடன் கம்போடிய பிரத மர் ராணுவ ரீதியாக பதிலளிப்பதைத் தவிர வேறு வழியில்லை என தாய்லாந்துக்கு எச்சரிக்கை விடுத்த சில மணி நேரத்தில் தாய்லாந்து மீதான தாக்குதலை கம்போடியா ராணுவம் துவங்கியது. பதிலுக்கு தாய்லாந்து ராணுவம் எப்-16 ரக போர் விமானம் மூலமாக கம்போடியா ராணுவத் தளங்கள், ஆயுதக்கிடங்குகள் மீது வான்வெளி தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த மே மாதமே இரு நாட்டு வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு கம்போடியா ராணுவ வீரர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் எல்லைப் பகுதியை மூடியதுடன் கடுமையான மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தன. மேலும் ஜூலை 16, 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் தாய்லாந்து ராணுவ வீரர்கள் எல்லைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கண்ணி வெடித் தாக்குதலில் சிக்கி படுகாயம டைந்தனர். இந்த தாக்குதலுக்கு தாய்லாந்து ராணுவம் ரோந்து போகும் எல்லைப் பகுதியில் கம்போடியா கண்ணி வெடிகளை வைத்துள்ளது என தாய்லாந்து குற்றம் சாட்டியது. மேலும் கம் போடியாவின் தூதரை நாட்டை விட்டு வெளி யேற்றியது. ஆனால் கம்போடியா இந்த குற்றச்சாட்டை ஏற்கவில்லை. கடந்த கால சண்டையில் கம்போ டியா எல்லையில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிக ளைத் தான் தாய்லாந்து வீரர்கள் மிதித்துள்ளனர். அந்நாட்டு வீரர்கள் தான் காட்டுப் பாதைகளிலி ருந்து விலகி அந்தப்பகுதியில் சென்றுள்ளனர் எனவும் கம்போடியா தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து ஜூலை 24 அன்று இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே ராணுவ மோதல் வெடித்து இரண்டு நாட்களாக தொடர்கி றது. இருதரப்பிலும் எல்லையோர மக்கள் வெளி யேற்றப்பட்டுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையேயான சரியாக வரையறுக்கப்படாத எல்லைப்பிரச்சனை தான் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இருதரப்பு உறவுகளைப் பாதித்து வருவதுடன் மோதலுக்கு காரணமாக உள்ளதாக கூறப்படுகிறது.தாய்லாந்துவெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் நிகோர்ண்டேஜ் பாலங்குரா இந்த மோதலுக்கு இருதரப்பு தீர்வை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.