காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் தீவிரமான இயற்கை பேரிடர்கள் உருவாகின்றன. எனவே 2035 ஆம் ஆண்டுக்குள் 100 சதவீத மின்சார கார்கள் பயன்பாட்டிற்கு மாறுவதற்கான அறி விப்பை கனடா அரசு இந்த வாரம் அறிவிக்க உள்ளது. மின்சார கார்கள் விற்பனையை அதிகரிக்கும் அதே வேளையில் வாகன விற்பனை மூலம் கார்ப்பரேட்டுகளுக்கு லாபத்தை உறுதிப்படுத்தவும் பல விதிகளை மாற்றி வருகிறது.