world

img

‘வேலை நிறுத்தம் செய்வதைத் தவிர வேறு வழி என்ன?’

லண்டன், பிப்.7- பிரிட்டனின் ரயில்வே தொழிலாளர்கள் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தால், நாடு முழுவதும் பல்வேறு  பகுதி களில் ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. தங்கள் வேலை நிறுத்தம் குறித்துக் கருத்து தெரிவித்த தொழிற்சங்கத் தலைவர் மைக் வேலன், ‘‘கடந்த நான்கு ஆண்டு களாக ரயில்வே ஓட்டுநர்களுக்கு எந்த வித ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை.  வேலை நிறுத்தம் செய்வதைத் தவிர  எங்க ளுக்கு வேறு என்ன வழி இருக்கிறது’’ என்று கேள்வியெழுப்பினார். ரயில் சேவை மிகவும் குறைவான அளவில் இருந்ததற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பள்ளிகள் இயங்கவில்லை

கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அள வுக்கு கடும் எதிர்ப்பு பிரிட்டனில் கிளம்பி யுள்ளது. ஆயிரக்கணக்கான பள்ளிக் கூடங்கள் மூடப்பட்டுள்ளன. ஆசிரியர் களும், கல்வித்துறை ஊழியர்களும் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர். முறையான ஊதியம், பணியிடச் சூழல் மேம்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி கல்வித்துறையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  ஆயிரக்கணக்கான அரசு ஊழியர் களும் தங்கள் பணிகளைப் புறக்கணித்துப் போராட்டங்களில் இணைந்திருக்கின்ற னர். கடுமையாக உயர்ந்துள்ள விலைவாசி யை சமாளிக்க முடியாமல் திணறும் நிலை யில், அதற்கேற்ற வகையில் ஊதிய உயர் வைத் தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், ரிஷி சுனாக் தலைமையிலான அரசு, இந்தக் கோரிக்கைகள் பற்றி எதுவும் இதுவரையில் பேச மறுப்பதால், வேறு வழியின்றி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டி ருப்பதாக சங்கங்கள் தெரிவிக்கின்றன.
 

;