world

img

தீக்கதிர் உலக செய்திகள்

2000 தொழிலாளரை பழிவாங்கிய  ஸ்டார்பக்ஸ்  நிறுவனம்

ஸ்டார்பக்ஸ் நிறுவனம் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த 2000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைக்கு ஆதரவாக இருக்கும் நிறுவனங்களை புறக்க ணிக்கும் போராட்டம் நடைபெற்றது. அதில் மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேல் ஆதரவு நிறு வனங்கள் அதிக பாதிப்பை சந்தித்ததை தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களை பழிவாங்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

பிரேசிலில் ஆட்சியை கவிழ்க்க  போல்சானரோ திட்டமிட்டார்

பிரேசில் முன்னாள் ஜனாதிபதி போல் சானரோ ஆட்சி கவிழ்ப்பிற்கு திட்ட மிட்டார் என முன்னாள் ராணுவ தலைவர் உறு திப்படுத்தியுள்ளார். இடதுசாரி ஜனாதிபதி யாக லூலா 2022 ஆம் ஆண்டு பதவியேற்ற போது அரசு அதிகாரிகள், ஆதரவாளர்கள் உடன் அந்நிகழ்ச்சியை கைப்பற்றி ஆட்சியை கவிழ்க்க  போல்சானரோ சதி திட்டம் தீட்டியது குறித்து அந்நாட்டு காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் அதை முன்னாள் ள் ராணுவ தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இஸ்ரேல் சிறைகளில் பாலஸ்தீனர்கள்  மீது பாலியல் வன்கொடுமை 

இஸ்ரேல் சிறைகளில் அடைத்து வைக் கப்பட்டுள்ள பாலஸ்தீனர்கள் பாலி யல் வன்கொடுமை செய்யப்படுவதாக ஐநா  சபை தெரிவித்துள்ளது.பாலியல் வன்கொடு மைகள் மட்டுமின்றி அடித்து கொடுமைப் படுத்துவது, நாய்களை ஏவி கடிக்க விடுவது என பல வகைகளில் பாலஸ்தீனர்களை  இஸ்ரேல் காவல்துறை மற்றும் ராணுவம் கொடுமை செய்வதாக பாலஸ்தீனத்திற்கான ஐ.நா நிவாரண அமைப்பு ஆய்வு அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தொழில்நுட்ப பணியாளர்களை வெளியேற்றும் மாலத்தீவு 

மாலத்தீவில் இருந்து தொழில் நுட்ப பணியாளர்களையும் வெளியேற்றுவோம் என  முகமது முய்சு தெரி வித்துள்ளார். முய்சு ஜனாதிபதியாக பொறுப் பேற்றவுடன் அந்நாட்டிலிருந்து இந்திய ராணுவ வீரர்களை வெளியேற்ற இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி ராணுவ வீரர்கள் இருந்த பணியில் தொழில்நுட்ப பணி யாளர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது அவர்களையும் மே-10 க்குள் வெளியேற முய்சு  உத்தரவிட்டுள்ளார்.

நவீன கடல் டிரோன்களை  சோதிக்கும் உக்ரைன் 

உக்ரைன் - ரஷ்யா போர்க் களத்தை கடல் டிரோன்களை சோதிக்கும் சோதனைக் களமாக உக்ரைன் பயன்படுத்தி வரு கிறது என செய்தி வெளியாகியுள்ளது. கருங்கட லில் இரு நாட்டு கப்பல் படைகளும் மோதிய போது ஆளில்லா இந்த சிறிய ரக படகுகளை வைத்து உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்ய போர்க் கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. 21 ஆம் நூற்றாண்டு துவங்கிய பிறகு நவீனத்தொழில் நுட்பத்தில் இந்த கடல் டிரோன்கள் அதிகளவு பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.