பீகாரில் வாக்காளர் திருத்தம் என்ற பெயரில் முறைகேடாகக் கோடிக்கணக்கில் வாக்காளர்களை நீக்கும் முறையைக் கைவிடக்கோரி இந்தியா கூட்டணி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் SIR தவறாகப் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து, இந்தியக் கூட்டணி எம்.பிக்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பிருந்து ஊர்வலமாக வந்து போராட்டம் நடத்தினர்.
வாக்காளர் திருத்தம் என்ற பெயரில் குறிவைத்து சிறுபான்மையினர்கள், பழங்குடியின மக்கள் மற்றும் பட்டியலின மக்களின் வாக்களிக்கும் உரிமை பறிக்கப்படுவதாக 4 நாட்களாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளும்ன்றத்தில் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.