india

img

மாநிலங்களவை எம்.பி-யாக கமல்ஹாசன் பதவியேற்பு!

மாநிலங்களவை எம்.பி-யாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகவைச் சேர்ந்த எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், மதிமுக பொதுச்செயலர் வைகோ, அதிமுகவின் சந்திரசேகரன் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரது பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. அவர்களுக்கு நேற்று பிரிவு உபசார நிகழ்வு மாநிலங்களவையில் நடைபெற்றது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட கமல்ஹாசன், ராஜாத்தி சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம், பி.வில்சன் ஆகியோர் மாநிலங்களவை எம்.பி-க்களாக பதவியேற்றுக்கொண்டனர். மேலும், அதிமுக-வை சேர்ந்த இன்பதுரை, முன்னாள் எம்.எல்.ஏ தனபால் ஆகிய இருவரும் வருகிற ஜூலை 28-ஆம் தேதி மாநிலங்களவை எம்.பி-க்களாக பதவியேற்க இருக்கின்றனர்.