தேவை நேர்மையான விசாரணை!
கர்நாடகாவில் மிகப்பெரிய ஆன்மீக மைய மான தர்மஸ்தலா பகுதியில் நீண்டகாலமாக சமூக மற்றும் அரசியல் செல்வாக்கைக் கொண்ட ஒரு குடும்பத்தின் அறக்கட்டளையால் மஞ்சுநாத சுவாமி கோவில் நிர்வகிக்கப்படுகிறது. இங்கு நடந்ததாகக் கூறப்படும் தொடர்ச்சியான கும்பல் பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் மற்றும் சட்டவிரோதமாக அடக்கம் செய்யப்பட்ட சடலங் கள் தொடர்பாக கர்நாடக அரசு சிறப்பு புலனாய் வுக் குழுவை (எஸ்ஐடி) ஏற்படுத்தியுள்ளது. அந்தக் குழுவில் இருந்து ஐபிஎஸ் அதிகாரி சௌம்யலதா விலகியுள்ளார். கோவில் நிர்வாகி வீரேந்திர ஹெக்டே அரசியல் செல்வாக்கு மிக்க வர். எனவே இந்த வழக்கை கர்நாடக மாநில அரசு மிகவும் எச்சரிக்கையுடன் கையாளவேண்டும்.
1995 முதல் 2014 ஆம் ஆண்டு வரையில் 500 க்கும் மேற்பட்ட மனித உடல்கள் அப்புறப்படுத்த அச்சுறுத்தப்பட்டதாக தூய்மைப் பணியாளர் கூறி யிருந்தார். அவர்களில் பலர் பெண்கள் மற்றும் சிறார் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வர்கள் என்று கூறப்படுகிறது. விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் இதுபோன்ற நடவடிக்கை தேவையில்லை என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்திருக்க வேண்டி யதில்லை. கோவிலில் ஒரு முன்னாள் தூய்மைப் பணியாளரின் வாக்குமூலத்தை சாதாரணமாக கடந்துசெல்ல முடியாது. ஏற்கனவே கடந்த காலங்களில் தர்மஸ்தலா நிர்வாகத்தின்மீது பாலியல் மற்றும் கொலைப் புகார்களை உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். அவை முறையாக விசாரிக்கப்படவில்லை.
இந்த சம்பவங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறழ்வுகள் அல்ல. அவை நிர்வாக மவுனத்தின் கீழ் செழித்து வளர்ந்த ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் நிறுவனத்தின் அறிகுறிகள். பள்ளி ஆசிரியை வேதவள்ளி, பி.யு.சி.மாணவி பத்மலதா, மருத்துவ மாணவி அனன்யா பட் ஆகியோரின் மரணம் மற்றும் 2012 ஆம் ஆண்டு 17 வயது சௌ ஜன்யாவின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை உள்ளிட்ட பல வழக்குகள் இந்த பிரச்ச னையோடு தொடர்புடையவையா என்பதை ஆராய வேண்டியுள்ளது.
மங்களூரு எனும் சிறிய நகரத்தில் தாக்கல் செய்யப்படும் இயற்கைக்கு மாறான மரண அறிக் கைகளின் (யுடிஆர்) எண்ணிக்கை ஆபத்தான அளவில் உள்ளது. இது புள்ளிவிவர முரண்பாடு என்று நிராகரிக்க முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது. லட்சக்கணக்கான மக்களால் போற்றப் படும் ஒரு நகரம் அச்சம், சந்தேகம் மற்றும் புதைக் கப்பட்ட உண்மைகளால் அப்படியே இருக்க முடியாது.\
தர்மஸ்தலாவில் நடந்ததாகக் கூறப்படும் தொ டர்ச்சியான கும்பல் பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் மற்றும் அடக்கம் செய்யப்பட்ட சம்ப வங்கள் தொடர்பாக கர்நாடக அரசின் சிறப்பு புல னாய்வுக் குழு தனது விசாரணையை வேகப்படுத்த வேண்டும். நீதிமன்ற உத்தரவை பெற்று குற்றவா ளிகள் கைது செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த குற்றத்தின் பின்னணியில் இருந்தவர்களையும் விட்டுவிடக்கூடாது.