பிரதமர் மோடியின் வெளிநாடு பயணங்களுக்காக இதுவரை ரூ.362 கோடி செலவிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓபிரையன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், வெளியுறவு அமைச்சகம் செலவின தரவு விவரங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2021-2024 வரை அரசுமுறை வெளிநாட்டுப் பயணங்களாக 20 நாடுகளுக்குச் சென்றுள்ளார். இதற்கான செலவு ரூ.295 கோடியும், 2025 பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அமெரிக்கா, பிரான்ஸ், மொரிஷியஸ், தாய்லாந்து, இலங்கை மற்றும் சவுதி அரேபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்களுக்காக ரூ.67 கோடி என மொத்தம் ரூ.362 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.