பெய்ஜிங், மார்ச் 13- சட்டரீதியான பாதுகாப்புகளைத் தனது குடிமக்களுக்கு வழங்கு வதில் உலகிலேயே முன்னணி நாடுகளில் ஒன்றாக சீனா உருவாகி யுள்ளது. சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் 13வது தேசிய மக்கள் காங்கிரஸ் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. இத்நக் கூட்டத்தில் பொருளாதாரம், பெருந்தொற்று, சர்வதேச நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது. மிகவும் முக்கியமான பிரச்சனை யாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட ஒன்றாக, குடிமக்களுக் கான சட்டரீதியான பாதுகாப்பு என்ற அம்சம் முன்னுக்கு வந்தது. குடி மக்களுக்கு மிகவும் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக சீனாவை ஆக்குவதே இந்த விவாதத்தின் மையப் புள்ளியாக இருந்தது. சட்டப் பாதுகாப்பு என்ற அம்சத்தில் குறிப்பான கவனம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிப் பேசப்பட்டது. இவர்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்கையில் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான வழிவகைகள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதே நேரத்தில் பொதுவாக, சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சி என்ற அம்சத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதையும் இந்தக் கூட்டம் கணக்கில் கொண்டு விவாதித்தது.
ஏற்கனவே இருக்கும் சட்டரீதியாக அம்சங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் வலுவாக இருந்தாலும், அதை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதே மக்கள் பிரதிநிதி களின் கருத்தாக இருந்தது. கடந்த 10 மாதங்களாக சிறப்பு நட வடிக்கை ஒன்றை சீன அரசு மேற்கொண்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்படுவதற்கு எதிராக, கடத்தல்காரர்களின் கட்டமைப்பைத் தகர்ப்பதற்காக இந்த நடவடிக்கைகள் நடந்தன. அதனால் ஏற்பட்ட முன்னேற்றமும் விவாதத்தில் முன்வைக்கப்பட்டது. மக்கள் மத்தியிலும் பாதுகாப்பு பற்றிய கவலைகள் உள்ளன. அது குறித்த கருத்துக் கேட்டலும் நடைபெற்றதால் அதன் அடிப்படை யில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்கப் போகிறார்கள். 2021 ஆம் ஆண்டில் சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்றங்கள் வழங்கிய 3,356 தீர்ப்புகள் மக்களிடம் பெரும் அளவில் நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது என்று இந்த விவாதங்களில் பங்கேற்ற தேசிய மக்கள் காங்கிரசின் உறுப்பினர்களில் ஒருவரான வாங் யான் தெரிவித்துள்ளார்.