world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ரஷ்ய பிரதமராகிறார்  மைக்கேல் மிஷுஸ்டின் 

மைக்கேல் மிஷுஸ்டினை ரஷ்ய பிரதமராக நியமிக்க அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் பரிந் துரைத்துள்ளார். பிரதமருக்கான வேட்புமனு வும்  அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக் கப்பட்டுள்ளது.  இதன் மூலம் மைக்கேல் இரண் டாம் முறையாக பிரதமராக பதவியேற்கி றார். ரஷ்யாவின் வரித்துறை அமைச்சராக பணியாற்றிய மைக்கேல் அரசியல் அனுபவம் அவரது திறமையின் காரணமாக பல முறை புடினிடம் பாராட்டு பெற்றுள்ளார்.

ஜிம்பாப்வே: 40 ஆண்டுகளில்  இல்லாத வறட்சி

ஜிம்பாப்வேயில் நாற்பது ஆண்டுக ளில் இல்லாத மோசமான வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில்,   ஜிம்பாப்வேயின் மக்கள் தொகையில் 50  சதவீதத்தினருக்கு  அவசரமாக உணவு மற்றும் தண்ணீர் தேவை என்று ஐ.நா மனிதாபிமான நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இவர்களுக்கு உதவ 43 கோடி அமெ ரிக்க டாலர்கள் வரை நிதி உதவி வேண்டும் என ஐ.நா கோரியுள்ளது. அந்நாட்டின் 1.5 கோடி மக் களில் 75 லட்சம் மக்கள் உயிர் வாழ மனிதாபி மான உதவிகள் தேவையாக உள்ளது.

இஸ்ரேல் உறவுகளைத் துண்டிக்கும் ஸ்பெயின் பல்கலை. கூட்டமைப்பு

ஸ்பெயின் நாட்டின் பல்கலைக்க ழகங்களின் கூட்டமைப்பு  இஸ் ரேல் உடனான உறவுகளை துண்டிப்பதாக அறி வித்துள்ளது. ரஃபா எல்லையில் பாலஸ்தீ னர்கள் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப் படுத்தி வரும் நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள்  முழுவதும் மாணவர்கள் இஸ்ரே லுடனான உறவுகளை தங்கள் நாட்டு பல்கலைக் கழகங்கள் துண்டிக்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். இந்நிலையில் ஸ்பெயின் மாண வர்களின் போராட்டத்தை தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகதிகளை மீட்ட  மொராக்கோ கடற்படை 

மொராக்கோ கடற்படை அந்நாட்டின் டான்-டான் துறைமுகத்திற்கு அருகிலுள்ள அட்லாண்டிக் கடல் பகுதியில் புலம்பெயர்ந்து வந்த அகதிகளை மீட்டனர். ஸ்பானிஷ் தீவுக் கூட்டமான கேனரி தீவுகளுக்கு தற்காலிகப் படகு மூலம் சென்ற 38 புலம்பெயர் மக்கள் அவர்களை இடைமறித்து விசாரித்து   எந்த பாதிப்பும் இன்றி  காப்பாற்றியதாக அந்நாட்டு கடற்படை குறிப்பிட்டுள்ளது.

தொடர் தீ வைப்பால்  ஐ.நா தலைமையகத்தை மூட முடிவு 

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரணம் மற்றும் பணி நிறுவ னம்  கிழக்கு ஜெருசலேம் தலைமைய கத்தை மூட முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள் ளது. இனவெறி தூண்டப்பட்ட இஸ்ரேல் மக்கள் அந்த கட்டிடத்திற்கு பலமுறை தீ வைத்து தாக்குதல் நடத்தியதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என ஐ.நா தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. ஐ.நா ஊழியர்களுக்கு எந்த உயிர்ச்  சேதமும் ஏற்படவில்லை. எனினும் தீ வைத்து தாக்கியதில்  பெரும் பொருளாதார சேதம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

;