world

img

தீக்கதிர் உலக செய்திகள்

இஸ்ரேலை விமர்சித்த   ஜெர்மனி துணை ஜனாதிபதி

ஜெர்மன் துணை ஜனாதிபதியும் காலநிலை பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராபர்ட் ஹபெக், சர்வதேச சட்டத்தை மீறி இஸ்ரேல் காசாவில் தாக்குதல் நடத்துகிறது என விமர்சித்துள்ளார். அந்நாட்டு தலைநகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இஸ்ரேலுக்கான ராணுவ ஆதரவு குறித்து கேள்வி  கேட்ட போது இதனை தெரிவித்தார்.ஆனாலும் ஹமாஸ் ஆயுதங்களைக் கீழே போட்டால் போர் உடனடியாக முடிவடையும் என்றும் அவர் வாதிட்டுள்ளார்.

கச்சா எண்ணெய் உற்பத்தியை  அதிகரிக்கும் ஈரான்

ஈரான்  கச்சா எண்ணெய் உற்பத்தி யை அதிகரிக்க முடிவெடுத் துள்ளது. தலைநகர் டெஹ்ரானில் இடைக்கால ஜனாதிபதி முகமது முக்பர் தலைமையில் நடைபெற்ற பொருளாதார கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது.  இதன்  மூலம் நாளொன்றுக்கு 40  லட்சம்  பீப்பாயாக கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிக்க உள்ளது என  அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. தற்போது நாளொன்றுக்கு 36 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து வருகிறது. 

இஸ்ரேல் வீரர்களை  சிறைப்பிடித்த ஹமாஸ்   

இஸ்ரேல் ராணுவ வீரர்களை சிறைப்பிடித்துள்ளதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.மே 25 அன்று நடைபெற்ற தாக்குதலின் போது வடக்கு காசா பகுதியில் ஜபாலியா அகதிகள் முகாம் பகுதியில் இஸ்ரேல் ராணுவ வீரர்களை சிறைப்பிடித்ததாக  ஹமாஸ் அமைப்பின் அல்-கசாம் படைப்பிரிவு செய்தித் தொடர்பாளர் அபு உபைதா தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த இஸ்ரேல் வீரரும் காசாவில் சிறைபிடிக்கப்படவில்லை என  இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

;