world

img

தீவிர வலதுசாரிகளின் வெற்றியை தடுக்க பிரான்சில் புதிய முன்னணி

பாரிஸ், ஜூன் 17- பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிகள் வெற்றி பெறாமல் தடுக்கவும் மேக்ரோன் கொண்டு வந்த சில மக்கள் விரோத திட்டங்களைத் திரும்பப் பெற வைக்கவும் அந்நாட்டில் உள்ள இடது சாரிகள் மற்றும் முற்போக்கு கட்சிகள் ஒன்றிணைந்து  புதிய  முன்னணியை அமைத்துள்ளன. ஜூன் 9 அன்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரான்ஸ் நாட்டின் தீவிர வலதுசாரியான லு பென்னின் தேசிய பேரணி  ( National Rally) கட்சி 30 இடங்களில் வெற்றி பெற்றது.  இமானுவேல் மேக்ரோனின் மறுமலர்ச்சிக்  கட்சி 13 இடங்களை மட்டுமே பெற்றது.  இந்நிலையில் வரவிருக்கும் பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் பென்னின் கட்சியே வெற்றி பெரும் என்று தேர்தல்  கணிப்பாளர்கள் தெரிவித்து வரு கின்றனர்.  

பெரும்பான்மை கிடைக்குமா ?

அந்நாட்டு தேர்தல் குறித்து வெளியாகி யுள்ள தற்போதைய கருத்துக் கணிப்புகள்  பென்னின் தேசியப் பேரணி கட்சி சுமார் 33 சதவீத வாக்குகள் வரை பெறும் என குறிப்பிட்டுள்ளது. இது மேக்ரோனின் மறு மலர்ச்சி கட்சிக்கு கிடைக்கும் வாக்கு சதவீதத்தை விட 20 சதவீதம் குறைவு ஆகும்.  அதனால் ஆட்சி அமைக்க பென்னின் தேசியப் பேரணி கட்சிக்கு பெரும்பான்மை இருக்காது. எனவே  மற்ற வலதுசாரிக்கட்சி, பழமைவாதகாட்சி மற்றும் மத்திய - வலதுசாரிக் கட்சிகளு டன் இணைந்து வெற்றி பெற பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் தேசியப் பேரணிக் கட்சியுடன் கூட்டணிக்கு  ஒத்துழைக்கும் கட்சிகள் மற்றும் கூட்டணியை மறுக்கும் கட்சிகள் ஆகிய இரண்டிலும் உட்கட்சி பிரச்சனைகள் எழுந்து வருகின்றன. 

புதிய முன்னணி 

இந்த அரசியல்சூழலில் தேசிய பேரணிக்கட்சியை பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரவிட்டுவிடக் கூடாது என பிரான்ஸ் நாட்டில் உள்ள லா பிரான்ஸ் இன்சுமைஸ், சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைவாதிகள் ஆகிய  மத்திய-இடது, முற்போக்கு கட்சிகள் ஒன்றிணைந்து புதிய முன்னணியை உருவாக்கியுள்ளன.  தற்போதைய அரசால் கொண்டு வரப்பட்ட மக்கள் விரோதக் கொள்கை களுக்கு எதிரான பிரச்சாரங்களை செய்வது எனவும் ஓய்வு பெறும் வய தைக் குறைப்பது, உணவு மற்றும் எரி சக்தி விலை உயர்வைக் கட்டுப்படுத்து வது உள்ளிட்ட வாக்குறுதிகளை பிரச்சா ரத்தின் பகுதியாக இணைத்துக்கொள்வது எனவும்  திட்டமிட்டுள்ளனர். தற்போது இந்த முன்னணி  28-30 சதவீத வாக்குச் சதவீதத்தை கொண்டுள்ளன. இந்த கட்சிகள் ஆட்சி யமைக்க முடியாவிட்டாலும் தீவிர வலது சாரிகள் பெரும்பான்மை பெறுவதை தடுக்கவும், மக்கள் விரோத திட்டங்களுக்  கான எதிர்ப்புகளை காட்டவும் முடியும் என அரசியல் விமர்சகர்கள் தெரி வித்துள்ளனர். 

தீவிர வலதுசாரி  எதிர்ப்புப் பேரணிகள்

இந்நிலையில் இனவெறி எதிர்ப்பு குழுக்கள், பிரான்ஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரிகள் உருவாக்கிய புதிய முன்னணி ஆகியோர் இணைந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் உட்பட நாட்டில் பல இடங்களில்  தீவிர வலதுசாரிகளுக்கு எதிராக  பிரச்சாரப் பேரணிகளை நடத்தியுள்ளனர். தொடர்ந்து நடைபெறும் இந்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் 3 லட்சம் முதல் 5 லட்சம் பேர்  பங்கேற்பார்கள் என  அந்நாட்டு  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  பிரான்ஸ் நாடாளுமன்றத்தின்  கீழவைக்கான இரண்டு சுற்று தேர்தல் ஜூன் 30 மற்றும் ஜூலை 7 ஆகியநாட்களில் நடைபெறும். 2027 வரை மேக்ரோன் தான் ஜனாதிபதியாகவும் வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புத்துறை பொறுப்பாளராகவும் இருப்பார். எனினும் இந்தத் தேர்தலில் தேசிய பேரணி கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தால் அவ ரது ஜனாதிபதி பதவி உள்ளிட்ட அனை த்தும் பலவீனமடையும். இதனால் உள் நாட்டு மற்றும் அயல் நாட்டுக் கொள்கை களில் தேசிய பேரணி கட்சியின் ஆதிக்கம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

 

;