world

img

ரகசியமாகப் பல நாடுகளில் இயங்கும் பிரிட்டன் படைகள்

லண்டன், மே 27- 2011 ஆம் ஆண்டில் இருந்து 19 நாடுகளில் ரகசியமாக பிரிட்டனின் சிறப்புப் படைகள் இயங்கி வந்திருப்பதாக ஆய்வு விபரங்கள் தெரிவிக் கின்றன. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடு கள் பிற நாடுகளின் இறையாண்மையை மீறி அவற்றின் விவகாரங்களில் தலையிடுவது வாடிக்கையானதாகும். எதிர்க்கட்சிகளுக்கு நிதி தருவது, பயங்கரவாத அமைப்புகளை ஊக்கு விப்பது, அத்தகைய அமைப்புகளுக்கு ஆயு தங்களை வழங்குவது, ஒரு நாட்டை மற்றொரு நாட்டோடு மோத விடுவது உள்ளிட்ட பல்வேறு வேலைகளை செய்து வருகின்றன. அமெரிக்கா தான் இத்தகைய சீர்குலைவு வேலைகளை அதிக மாகச் செய்கிறது. அதேநேரத்தில், பிரிட்டனும் தனது பங்குக்கு சில வேலைகளைச் செய்கிறது என்பது ஆய்வில் அம்பலமாகியுள்ளது. “ஆயுதந்தாங்கிய வன்முறை மீதான நட வடிக்கை” என்ற ஆய்வுக்குழு மேற்கொண்ட ஆய்வில் கடந்த 12 ஆண்டுகளில் 19 நாடுகளில் ரகசியமாக பிரிட்டனின் சிறப்புப் படைகள் இயங்கி  வந்துள்ளன என்று தெரிய வந்திருக்கிறது. இந்த ஆய்வறிக்கையை கார்டியன் நாளிதழ் வெளி யிட்டுள்ளது.

பிரிட்டனின் சிறப்புப் படைகள் ரகசி யமாக இயங்கிய 19 நாடுகளில் 11 நாடுகள் இஸ் லாமிய நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இராக், அல்ஜீரியா, லிபியா, துனீசியா, ஓமன், சோமாலியா, ஏமன் ஆகியவை அந்த இஸ் லாமிய நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அதோடு, ரஷ்யா, உக்ரைன், நைஜீரியா, கென்யா, சைப்ரஸ், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடு களிலும் இந்த சிறப்புப் படைகள் ரகசியமாக இயங்கியுள்ளன. அண்மையில் மோதல் எழுந் துள்ள சூடானிலும் அவர்கள் இயங்கி வருகி றார்கள். பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தா னுக்கும் பிரிட்டனின் சிறப்புப் படைகள் அனுப் பப்பட்டதாக ஆய்வறிக்கையில் குறிப்பிட்டி ருக்கிறார்கள். பெரிய நாடான பிரான்சையும் விட்டு வைத்ததாகத் தெரியவில்லை. அங்கும் இந்த சிறப்புப் படையினரின் கைவரிசை காட்டப்பட்டி ருக்கிறது. மாலி மற்றும் எஸ்தோனியா ஆகிய நாடுகளுக் கும் சிறப்புப் படைகளை ரகசியமாக பிரிட்டன் அனுப்பி வைத்திருக்கிறது. இந்த சிறப்புப் படை களின் பெரிய அளவிலான நடவடிக்கையாக சிரி யாவில் அவர்கள் மேற்கொண்டவை கருதப்படு கின்றன. 2012 ஆம் ஆண்டில் இருந்து இந்தப் படை கள் அங்கு இயங்கி வருகின்றன. ஜனாதிபதி பஷர் அல் அஸ்ஸாத் தலைமையிலான அரசைக் கவிழ்க்கும் நோக்கத்தில் அங்கு இயங்கி வரும் எதிர்த்தரப்போடு இணைந்து இந்த சிறப்புப் படைகளும் சண்டையில் இறங்கியுள்ளன.

நேரடிப் போர்

உக்ரைனில் பிரிட்டனின் சிறப்புப் படைகள் நேட்டோ சார்பில் நிறுத்தப்பட்டுள்ளன. 97 படைப் பிரிவுகள் அங்கு இயங்கி வருகின்றன. அவற்றில் பிரிட்டன் சார்பாக 50 பிரிவுகளும், அமெரிக் காவின் 11 பிரிவுகளும், பிரான்ஸின் 15 பிரிவுகளும் அவற்றில் இடம் பிடித்துள்ளன. இந்த விபரங்கள் அமெரிக்க ராணுவத் தலைமையகம் பென்ட கனில் இருந்து கசிந்த ஆவணங்களில் இருந்தன. ஆனால், இவர்களின் பணி என்ன என்பது அந்த  ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், தனியாக  50 பேர் கொண்ட சிறப்புப் படைப்பிரிவு ஒன்று உக்ரைன் படைகளுடன் இணைந்து ரஷ்யா வுக்கு எதிராக சண்டை போட்டதாக அந்த ஆவ ணங்கள் அம்பலமாக்கின. போர் நடந்து கொண்டிருக்கும்போது பல்வேறு வகையான பயிற்சிகள், மற்றும் குறிப்பான சில நபர்களைப் பாதுகாப்பது உள்ளிட்ட பணிகளை பிரிட்டனின் சிறப்புப் படைகள் செய்திருக்கின்றன. எந்தவிதத் தயக்கமுமின்றி யாரை வேண்டுமா னாலும் கொல்லலாம் என்று இந்தப் படைப் பிரிவுக்கு பிரிட்டனின் முன்னாள் பிரதமர் கேமரூன் அனுமதி அளித்திருந்தார். இந்தப் படைப்பிரிவு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல் தர வேண்டும். ஆனால் சிறிய நடவடிக்கைகளுக்கு அதைப் பெற வேண்டி யதில்லை என்பதால் சிறிய ரகசிய வேலைகள் ஏராளமான அளவில் மேற்கொள்ளப்படுகின்றன.
 

;