வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வட கொரியா பயணம்
வியட்நாமின் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் டூ லாம் அக்டோபர் மாதம் வட கொரியா செல்லவுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் வியட்நாம் தலைவர்களுள் ஒருவர் வட கொரியாவிற்கு பய ணம் செய்வது இதுவே முதல்முறை. இரு நாடுகளு க்கும் நெருங்கிய உறவுகள் இருந்தா லும் வர்த்தக உறவுகள் எதுவும் இல்லை. இந்நிலையில் இந்த பயணம் முக்கி யத்துவம் பெற்றுள்ளது. எனினும் இந்த பயணம் குறித்து அரசு தரப்பில் அதி காரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
பாலஸ்தீனத்தை அங்கீகரித்த நாடுகளுக்கு நேதன்யாகு கண்டனம்
ஐ.நா பொது அவையில் பேசுவதற் காகவும் டிரம்ப்புடன் பேச்சு வார்த்தை நடத்தவும் நேதன்யாகு அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். சில மேற்குலக நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீ கரித்த நிலையில் அந்த நாடுகளின் தலை வர்களை நேதன்யாகு கண்டித்துள்ளார். மேலும் இது இஸ்ரேலை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது. இஸ்ரேலின் மையத்தில் ஒரு நாட்டை உருவாக்க நினைக்கும் தலை வர்களை நான் கண்டிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் பேச்சுக்கு சீனா பதிலடி
ஐ.நா. பொது அவையில் பேசிய டிரம்ப் சீனாவும், இந்தியாவும் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதால் தான் உக்ரைனுக்கு எதிராக போர் நடத்த ரஷ்யா விற்கு பணம் கிடைக்கிறது என பேசினார். மேலும் அந்நாடுகள் மீது அதிக தடைகள் விதிக்க வேண்டும் என டிரம்ப் பேசினார். இந்நிலையில் அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ரஷ்யாவுடன் இப்போதும் தொடர்ந்து வர்த்தகம் செய்து வருகின்றன என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜியு ஜியாகுன் பதிலடி கொடுத்துள்ளார்.
சிறிய அணு உலைகள் அமைக்க ஈரான்-ரஷ்யா ஒப்பந்தம்
சிறிய அளவிலான அணு உலைகள் அமைப்பதற்காக ஈரான் மற்றும் ரஷ்யா புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இவ்வொப் பந்தம் இரண்டு நாடுகளின் நிலையான வளர்ச்சி, எரிசக்தி பாதுகாப்பை வலுப் படுத்துவது, தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது ஆகியவற்றுக்காக அணு சக்தியின் அமைதியான வளர்ச்சிக் கான பயன்பாடுகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள் ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா : 80 பேர் படுகொலை
காசா முழுவதும் இஸ்ரேல் ராணு வம் நடத்திய தொடர் தாக்குத லில் குழந்தைகள் உள்பட 80 பாலஸ்தீனர்கள் படு கொலை செய்யப்பட்டுள்ள னர். ஒவ்வொரு நாளும் பாலஸ்தீனர்களை கொத்துக் கொத்தாக இஸ்ரேல் படு கொலை செய்து வருகிறது. இந்நிலை யில் நிவாரண உதவிக்காக வரிசையில் காத்திருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன் குண்டுகளும் வீசப் பட்டுள்ளன. இவ்வாறு காசா முழுவதும் நடைபெற்ற தாக்குதலில் 20 குழந்தைகள் உள்ளிட்டு 80 பேர் படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.