மக்கள் போராட்டத்தின் வெற்றி : பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரித்த பிரான்ஸ்
பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடாவை தொடர்ந்து பிரான்ஸ் அரசும் பாலஸ் ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீ கரித்துள்ளது. மேலும் காசா மீதான போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளது. இது கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக பாலஸ் தீனத்துக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடு களில் மக்கள் நடத்தி வந்த தொடர் போராட் டத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப் படுகிறது. பாலஸ்தீன அங்கீகாரம் பற்றி பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், போர் மற்றும் அழிவு என்ற இந்த சுழற்சியை முடி வுக்குக் கொண்டுவர ஒரே ஒரு தீர்வு தான் உள்ளது. ஒருவர் மற்றொருவரை அங்கீ கரிப்பது தான் அதன் வழி. காசாவில் தற்போது நடந்து கொண்டிருக்கும் போருக்கு எந்த நியாய மும் இல்லை என கூறினார். அதே நேரத்தில் வரலாற்று ரீதியாக பாலஸ்தீனர்களின் பிரச்ச னைகளை இஸ்ரேலியர்களுடன் சமன் செய்து இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் பேசி னார். இது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் தற்போது வரிசையாக பாலஸ்தீனத்தை அங்கீகரித்து வந்தாலும் மறுபுறம் இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு செய்து வரும் கொடுமைகளை தடுக்க சர்வ தேச அளவில் எந்த ஒரு ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பையும் எடுக்கவில்லை. மாறாக இஸ்ரேலின் இனப்படுகொலை தாக்குதலுக்கு இந்நாடுகளில் உள்ள பெரு நிறுவனங்கள் உதவி செய்து இனப்படுகொலைக்கு ஆதரவா கவே உள்ளன. தார்மீக ரீதியாக இந்நாடுகள் இஸ்ரேல் உடனான கல்வி, ஆராய்ச்சி, பொரு ளாதார ராணுவ ஒத்துழைப்பு என அனைத்து விதமான ஒப்பந்தங்களில் இருந்து வெளி யேறி சர்வதேச அளவில் அதை தனிமைப் படுத்த வேண்டும் என கருத்துக்கள் தெரிவிக் கப்பட்டுள்ளன. தற்போதும் கூட பாலஸ்தீனத்தை அங்கீ கரிக்க வேண்டும் என பல மாதங்களாக ஐரோப்பிய நாடுகளில் மக்கள் போராடி வரு வதன் பின்னணியிலேயே இந்நாடுகள் பாலஸ் தீனத்தை அங்கீகரித்துள்ளன. அந்நாடுகளில் உள்ள பல்வேறு மக்கள் பிரச்சனைகளுடன் இணைந்து காசா ஆதரவு போராட்டம் ஆட்சியாளர்களின் மீதான கோபத்தை அதி கரித்துள்ளது. இந்நிலையில் மக்களின் கோபத்தை தணிக்கவும் போராட்டங்களை கட்டுப்படுத்தவுமே இந்த யுக்தி கையாளப் பட்டுள்ளது என கூறப்படுகிறது. பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான இந்த முயற்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் இஸ்ரேல் கடும் விமர்சனம் செய் துள்ளன.