world

img

உள்நாட்டுப்போர் நடக்கும் சூடானில் இனப்படுகொலை, பஞ்சம், காலராவால் சூழப்பட்ட மக்கள்

உள்நாட்டுப்போர் நடக்கும் சூடானில் இனப்படுகொலை, பஞ்சம், காலராவால் சூழப்பட்ட மக்கள் 

கார்டூம்,செப்.30-  சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரின் காரணமாக அந்நாட்டு மக்கள் இனப் படுகொலை, பஞ்சம், காலரா, பாலியல் வன்கொடு மைகளால் சூழப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப் பட்டுள்ளது.  சூடானில் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக ராணு வத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போர் நடந்து வருகிறது. இந்த போரில் அந்நாட்டின் பல மாநிலங்களில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு விட்டன. ஐ.நா. நிவாரண அமைப்புகளால் அனுப் பப்படும் உணவு குடிநீர் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும், சேமிப்புக் கிடங்குகளையும் ஆயுதப் படைகள் கொள்ளையடித்து விடுகின்றன அல்லது குண்டு வீசி அழித்து விடுகின்றன. தண்ணீர் லாரிகளில் வரும் நீரையே மக்கள் நம்பி யுள்ள நிலையில் அவற்றின் மீது குண்டு வீசப் படுகிறது. இதனால் அங்கு உணவு மற்றும் தண்ணீர் பஞ்சம் மிக தீவிரமாகியுள்ளது.  மேலும் பெண்கள் மற்றும் சிறுவர்களின் மீது பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. குழந்தைகளை கடத்துவது, அவர்களை கட்டா யமாக தங்கள் ஆயுதக்குழுவில் இணைப்பது ஆகிய கொடுமைகளும் நடந்து வருகின்றன.  அந்நாட்டின் டார்ஃபூர் மாநிலத் தலைநக ரான எல் ஃபாஷரை துணை ராணுவம் ஆக்கிரமித் துள்ளது. 2024 ஆகஸ்ட் மாதம் இந்த நகரத்திற்கு  வெளியே உள்ள உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்க ளுக்கான முகாம்களில் முதன்முதலில் பஞ்சம் உருவானதாக அறிவிக்கப்பட்டது.  இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு 500 நாட்க ளுக்கும் மேலாக வெளியில் இருந்து எந்த உணவுப் பொருட்களும் கொடுக்க செல்ல முடிய வில்லை. தற்போது அந்த நகரத்தில் உள்ள சந்தைகளும் துணை ராணுவத்தால் குண்டு வீசி அழிக்கப்பட்ட நிலையில் உணவுப் பொருட்களின் விநியோகம் முற்றிலும் தடைபட்டு பஞ்சம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இது குழந்தைகளிடையே ஊட்டச்சத்துக் குறைபாட்டை அதிகரித்து வருகிறது.   அதே போல மருத்துவமனைகள் குறிவைத்து தாக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. இத னால் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்படும் நபர்க ளுக்கு சிகிச்சை தர முடியாத சூழல் உருவாகி யுள்ளது. இந்த சூழலில் இப்போரை தூண்டி விட்டு ஆயுத உதவி செய்து வருகிற சவூதி அரேபியா விற்கே பாதிக்கப்பட்ட மக்களை சிகிச்சைக்காக கொண்டு செல்ல வேண்டிய சூழல் உருவாகி யுள்ளது. தற்போது சூடானின் அனைத்து மாநிலங்களி லும் காலரா நோய் பரவி வருகிறது. இந்த மோச மான சூழல் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கையை முழுமையாக அழித்து வருகிறது என சர்வதேச அமைப்புகள் தெரிவித்துள்ளன.