world

img

இனப்படுகொலை உடந்தையாளர்களால் நடத்தப்பட்ட அமைதி மாநாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடமில்லை

இனப்படுகொலை உடந்தையாளர்களால் நடத்தப்பட்ட அமைதி மாநாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடமில்லை

கெய்ரோ,அக்.14- இஸ்ரேல்-ஹமாசுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி இருவருக் கும் இடையே கைதிகள் பரி மாற்றம் நடைபெற்றுள்ளது. இதே தினம் எகிப்தில் இடைக் கால போர் நிறுத்தம் தொடர் பான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் அமைதி மாநாடு ஒன்று நடைபெற்றது. எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா மற்றும் அமெ ரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமை வகித்த இந்த மாநா ட்டில் அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், கத்தார், எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்கள் கையெழுத்திட் டுள்ளனர். உண்மையில் பாதிக் கப்பட்ட தரப்பான பாலஸ்தீ னர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் ஹமாஸ் அமைப் போ, அல்லது வேறு நபர்களோ இந்த அமைதி மாநாட்டில் பங்கேற்கவில்லை.  இத்தாலி, இந்தியா, பிரான்ஸ், துருக்கி, ஜெர்மன், பிரிட்டன், கனடா, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான் மன்னர் என 20 நாடுகளின் ஜனாதிபதி, பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். மேலும் பாலஸ்தீன அதிகார சபையின் ஜனாதிபதியாக உள்ள அப்பாஸ், ஐ.நா அவையின் பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் இதில் பங்கேற்றனர்.  இம்மாநாட்டில் பங்கேற்ற நாடுகள் அனைத்தும் நேர டியாகவும் மறைமுகமாகவும் பாலஸ்தீனர்களின் மீதான இஸ்ரேலின் இனப்படுகொ லைக்கு துணை போனவை யாகும்.  இந்நிலையில் கொலையா ளிகளால் நடத்தப்பட்ட அமைதி மாநாட்டில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு இடமில்லை. இது முழுக்க முழுக்க ஒரு சார்பு கொண்ட மாநாடாக நடத்தப் பட்டுள்ளது என கடுமையாக விமர்சனம் எழுந்துள்ளது.