அமெ. அச்சுறுத்தலுக்கு எதிராக துணைநிற்க வெனிசுலா அழைப்பு
போதைப் பொருட் கள் கடத்துவ தாக வெனிசுலா கப்பல்கள் மீது அமெரிக்கா குண்டுவீசி தாக்குதல் நடத்துகிறது. தங்கள் பிராந்தியத்தில் அமெரிக்காவால் உரு வாக்கப்பட்டுள்ள இந்த அச்சுறுத்தலுக்கு எதிராகப் பிற நாடுகள் தங்களுக்கு துணை நிற்க வேண்டும் என வெனிசுலா அழைப்பு விடுத்துள்ளது. வெனிசுலா அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாக அவர்களால் குற்றம் சாட்ட முடியாததால், அநாகரிகமான, அபத்தமான பொய்களை அமெரிக்கா உருவாக்குகிறது எனவும் அந்நாடு குற்றம் சாட்டியுள்ளது.
புதிய இறக்குமதி வரி; அமெ. வர்த்தகக் குழு எச்சரிக்கை
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும், மரசாமான்கள், சமையலறை அலமாரிகள், வீட்டு அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றுக்கு டிரம்ப் வரிவிதித்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடி, பணவீக்கத்தால் அமெரிக்கா மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வரி உயர்வு நாட்டில் உள்ள சில்லரை விற்பனை யாளர்களின் வர்த்தகத்தை மேலும் அதிக மாக நேரடியாகப் பாதிக்கும் என்று ஹோம் ஃபர்னிஷிங்ஸ் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
சூயஸ் கால்வாயின் வருவாய் 79 ஆயிரம் கோடி ரூபாய் சரிவு
கடந்த இரண்டு ஆண்டுகளில் சூயஸ் கால்வாயின் வருவாய் 79,000 கோடி ரூபாய்களுக்கு மேல் சரிந்துள் ளது. பாலஸ்தீனர்கள் மீதான இனப்படு கொலை தாக்குதலை நிறுத்த வலி யுறுத்தி செங்கடல் பகுதியில் இஸ்ரேல் ஆத ரவு நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது ஏமன் பகுதியில் உள்ள ஹவுதி அமைப்பு தாக்கு தல் நடத்தி வருகிறது. இதனால் அப்பகுதி யில் உள்ள சூயஸ் கால்வாய் பகுதியில் போக்குவரத்து தடைபட்டு எகிப்து பொரு ளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டின் ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா தெரிவித்துள்ளார்.
13,000 ஊழியர்களை பணிநீக்க ‘போஷ்’ நிறுவனம் முடிவு
அடுத்த 5 ஆண்டுகளில் 13,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ஜெர்மனியைச் சேர்ந்த தொழில் நுட்ப நிறுவனமான “போஷ்” முடிவு செய் துள்ளது. பொருளாதார மந்தம், பணவீக்கம், சர்வதேசத் தடைகள் காரணமாக ஆட்டோ மொபைல் துறை தேக்கம் அடைந்துள்ளது. இதனால் பணி நீக்கம் செய்கிறோம் என காரணம் சொல்லப்படுகிறது. எனினும் இந்த நிறுவனம் நீக்கப்படும் பணியாளர் களின் இடத்தை செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் மூலம் நிரப்பிவிடும் என கூறப்படுகிறது.
‘சார்க் அமைப்பை மீண்டும் செயல்பட வைக்க வேண்டும்’
தெற்காசிய நாடுகள் கூட்டமைப் பான சார்க் அமைப்பை மீண்டும் செயல்பட வைக்க கோரிக்கை எழுப்பப் பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே நீடித்து வரும் பதற்றத்தால் கடந்த 2014க்குப் பிறகு இவ்வமைப்பின் உச்சி மாநாடுகள் நடைபெறாமல் முடங்கிய நிலைக்குத் தள்ளப் பட்டு செயல்படாமல் உள்ளது. இந்நிலையில் ஐ.நா பொது அவையில் பேசிய வங்கதேச இடைக்கால பிரதமர் முகமது யூனுஸ் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
