டிரம்ப்புக்கு லூலா கடும் கண்டனம்
அமெரிக்கா, பிரேசில் பொருட்களின் மீது 50 சதவீதம் வரி விதித்ததைத் தொடர்ந்து டிரம்ப்பிற்கு லூலா கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், அல்ஜீரியா, இராக், லிபியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு 30 சதவீதம், புருனே மற்றும் மால்டோவா நாடுகள் மீது 25 சதவீதம், பிலிப்பைன்சுக்கு 20 சதவீதம் வரியும் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்புக்கு பதிலடி நடவடிக்கை எடுக்கப்படும் என லூலா எச்சரித்துள்ளார். பிற நாடுகளும் அமெரிக்காவுக்கு கடிதம் எழுதியுள்ளன.
சீனாவிடம் ஆயுத கொள்முதல் செய்ய துவங்கியது ஈரான்
ஈரான் தனது ராணுவத்தை பலப்படுத்தும் வகையில் சீனாவிடம் ஆயுதக் கொள் முதலை துவங்கியுள்ளது. ஏவுகணை அமைப்பு களை பலப்படுத்தும் வகையில் ஏவுகணைகள், பேட்டரிகள் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய் யத்துவங்கியுள்ளது. மேலும் சீனாவின் அதி நவீன ஜே-10 போர் விமானங்களையும் வாங்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சீன ராணுவ அமைச்சகம் இந்த விமானங்களை தனது நட்பு நாடுகளுக்கு விற் பனை செய்ய தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
கோல்டன் விசா திட்டம் ஐக்கிய அரபு அமீரகம் மறுப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தில் 23 லட்சம் ரூபாய் மதிப்பில் முதலீடாகவோ அல்லது சொத்துக்களை வாங்குவதன் மூலமாக இந்தியர்கள் கோல்டன் விசாவை பெறலாம் என அந்நாடு அறிவித்ததாக செய்திகள் வெளி வந்தன. இதற்கு முன்பு 4.5 கோடிகளுக்கு மேல் முதலீடு செய்ய வேண்டும். இந்நிலையில் இந்த தகவலை ஐக்கிய அரபு அமீரகத்தின் குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஆணையம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக ஊடகத் தகவலை ஆணையம் நிராகரித்துள்ளது.
அரிய கனிமங்களை வாங்க இந்தியா பேச்சுவார்த்தை
ஆஸ்திரேலியாவிடமிருந்து அரிய கனிம வகைகளை பெற இந்தியா பேச்சுவார்த் தை நடத்தி வருகிறது. ஆஸ்திரேலியாவில் யுரேனியம், சமாரியம், கடோலினியம், தெர்பியம்,டைஸ்ப்ரோசி யம், லுடேடியம் போன்ற அரியவகை கனிமங்கள் உள்ளன. இவை மின் மோட்டார்,பிரேக்கிங் சிஸ்டம்ஸ், செல்போன்கள், ஏவுகணைதயாரித்தலுக்குப் பயன்படுத்தப்படுகிற மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி க்கு தேவையான கனிமங்கள்ஆகும். சீனா அதன் கனிம வளங்கள் ஏற்றுமதி மீதுகட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில் ஆஸ்திரேலியாவிடமிருந்து கனிமங்கள் வாங்கும் முயற்சியில் உள்ளது இந்தியா.
ரஷ்ய வெளியுறவு அமைச்சருடன் மார்கோ ரூபியோ சந்திப்பு
அமெரிக்கா உக்ரைனுக்கு அதிக ஆயுதங்க ளை கொடுப்பதாக டிரம்ப் அறிவித்த பிறகு உக்ரைன் மீது மிகப்பெரிய டிரோன் தாக்குதலை ரஷ்யா நடத்தியது. இந்நிலையில் போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெளி யுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்திக்க உள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஆசியான் கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இந்த சந்திப்பு நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகள் மீதான தடையை நீக்கிய அமெரிக்கா : ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் அல்பனீஸ் மீது தடை விதித்தது
நியூயார்க், ஜூலை 10- 2018 முதல் பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்திருந்த ஹயாத் தஹ்ரீர் அல்-ஷாம் (HTS) என்ற பயங்கரவாத அமைப்பை வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பு (FTO) என்ற பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. அதே நேரத்தில் இஸ்ரேல் செய்து வரும் இனப் படுகொலைக்கு உடந்தையாக இருந்து இனப்படு கொலை பொருளாதாரத்தின் மூலம் லாபம் சம்பா திக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்ட ஐ.நா. அவையின் சிறப்பு அறிக்கை யாளர் ஃபிரான்செஸ்கா அல்பனீஸ் மீது தடை விதித்துள்ளது. சிரியாவில் இருந்த அல் அசாத் ஆட்சியை கவிழ்க்க அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் அதிகாரப்பூர்வ கிளையாக அல்-நுஸ்ரா முன்னணி என்ற பயங்கரவாதக் குழு அமெ ரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் உளவுத்துறை மூலம் சிரியாவில் உருவாக்கப் பட்டது. அந்த அல்-நுஸ்ரா முன்னணியிலிருந்து ஹயாத் தஹ்ரீர் அல்-ஷாம் பயங்கரவாதக் குழு உருவானது. இக்குழுவின் தலைவர் அஹ்மத் அல்-ஷாரா சில பயங்கரவாதக் குழுக்களுடன் இணைந்து இஸ்ரேல், துருக்கி, அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ஆகிய நாடுகளின் நீண்ட கால உதவி மற்றும் திட்டமிடல் மூலமாக சிரியாவில் இருந்த அல் அசாத் அரசை 2024 டிசம்பர் மாதம் கவிழ்த் தார். பிறகு அவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன் அஹ்மத் அல்-ஷாரா வின் தலைக்கு டிரம்ப் சுமார் 85 கோடி ரூபாய் (10 மில்லியன் டாலர்கள்) விலை நிர்ணயித்து இருந்தார். தற்போது பயங்கரவாதிகள் தலை மையிலான சிரியா அரசை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்கா முன்னெடுத்து வரும் நிலையில் தான் இந்த தடையையும் நீக்கியுள்ளது. பயங்கரவாதிகளை புனிதர்களாக மாற்றும் இதே அமெரிக்கா, இஸ்ரேலின் இனப்படுகொலை யை உலகின் கண் முன் அம்பலப்படுத்தி வரும் ஐ.நா. அவையின் சிறப்பு அறிக்கையாளர் ஃபிரான் செஸ்கா அல்பனீஸ் மீது தடை விதித்துள்ளது. மேற்குக் கரை மற்றும் காசாவுக்கான ஐ.நா. வின் சிறப்புப் பிரதிநிதியான அல்பனீசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஐ.நா. அவையை அமெரிக்கா வற்புறுத்தி வந்தது. அது நிறை வேறாத நிலையில் தான் தற்போது அவர் மீது தடை களை விதித்துள்ளது. ஜூலை 1 அன்று இஸ்ரேல் செய்து வரும் இனப் படுகொலைக்கு உடந்தையாக உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் பட்டியலை அவர் வெளியிட்டார். மேலும் அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது சர்வதேச அமைப்புகளும், நாடுகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும், தடைகள் விதிக்க வேண்டும், பொருளாதார ரீதியாக புறக்கணிக்கப்பட வேண்டு மெனவும் அவர் வலியுறுத்தினார். இதனால் மிரண்டு போன அமெரிக்கா அவர் மீது தடை விதித்தது. இஸ்ரேலுக்கும் அமெரிக்கா வுக்கும் எதிரான அல்பனீஸின் அரசியல் மற்றும் பொருளாதாரப் போரை இனியும் எங்களால் பொ றுத்துக்கொள்ள முடியாது. எங்கள் கூட்டாளிக ளின் தற்காப்பு உரிமையில் நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம் என அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.