world

img

அமெரிக்கா கோட்டை விடும் இடத்தில் கால்பதிக்கும் சீனா : அறிவியல் தொழில்நுட்ப நிபுணர்களை ஈர்க்க புது விசா நடைமுறை

அமெரிக்கா கோட்டை விடும் இடத்தில் கால்பதிக்கும் சீனா : அறிவியல் தொழில்நுட்ப நிபுணர்களை ஈர்க்க புது விசா நடைமுறை

பெய்ஜிங்,செப்.22- உலக நாடுகளை மிரட்டுவதற்காக அமெரிக்கா முன்னெடுத்துள்ள விசா கொள்கையை சீனா  தனக்கு சாதகமாகப் பயன்படுத்தும். அமெரிக்கா கோட்டை விடும் இடத்தில் சீனா கால்பதித்து வரு கிறது என சீனாவின் புது விசா நடைமுறைக்கு ஆதரவுக்கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.  அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினர் எச்1பி விசாவை பெற வேண்டும் என்றால் விண் ணப்பத்தின் போது சுமார் 88 லட்சம் கோடி ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என டிரம்ப் உத்தர விட்டுள்ளார்.  இந்நிலையில் சீனா கொண்டு வர உள்ள விசா நடைமுறையானது அமெரிக்காவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களை நோக்கிச் செல்லும் நிபுணர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது.  2035-க்குள் சீனா தொழில்நுட்பத்தில்  வளர்ந்த நாடாக மாறவேண்டும் என இலக்கு நிர்ண யித்து திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது. இந்த  இலக்கை அடையவேண்டும் என்றால் அமெ ரிக்காவுடன் போட்டியிட்டு சீனா வெற்றி பெற வேண்டும். இதற்காக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதத் துறையை சேர்ந்த நிபுணர் களை தனது நாட்டில் பணியமர்த்தி அவர்கள் மூலமாக உள்நாட்டு அறிவியல் தொழில்நுட் பத்தை வளர்க்க வேண்டும் என முடிவெடுத்துள்ளது.   இதற்காக ஏற்கனவே “திறமையான இளம் விஞ்ஞானிகள் திட்டம்” மூலம் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களை சீனா ஈர்த்து வருகிறது. இந்நிலையில் “வெளி நாட்டு சிறந்த இளம் விஞ்ஞானிகள் நிதித் திட்டம்” மூலம் அதிக நிபுணத்துவம் கொண்ட விஞ்ஞானி கள், பொறியாளர்களை ஈர்க்கும் நோக்கில் உரு வாக்கப்பட்டுள்ளது.  கே விசா இத்திட்டத்தின் மூலம் சீனாவில் பணியாற்ற வெளி நாட்டு நிபுணர்களை ஈர்ப்பதற்காகவே   கே விசா  என்ற நடைமுறையை சீனா உருவாக்கியுள்ளது.  இதற்காக சீனாவிலுள்ள முன்னணி பல்கலைக் கழகங்கள் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களை ஈர்க்கும் வகையில் அதிக ஊதியத்தையும் ஊக்கத் தொகைகளையும் வழங்கி வருகின்றன. இந்த கே  விசாவுக்கு விண்ணப்ப செயல்முறையும் எளிமை யாக்கப்பட்டுள்ளது. சீனாவில் பணியாற்ற அந் நாட்டு நிறுவனங்கள் அல்லது முதலாளிகளின் கடி தம் தேவைஇல்லை.சீனாவின் இந்த நடைமுறை களுக்கு மாறாக டிரம்ப் விசா கட்டுப்பாடு, அறிவி யல் ஆராய்ச்சி,பல்கலைக்கழகங்கள் மற்றும் மாணவர்களுக்கான உதவித்தொகை ஆகியவற் றுக்கான நிதியை வெட்டுவது அல்லது குறைப்பது என பல மோசமான நடவடிக்கைகளை டிரம்ப் எடுத்து வரும் நிலையில் தொழில்நுட்ப வல்லுநர்க ளை சீனா அதிகம் ஈர்க்கும் வாய்ப்பு உருவாகி யுள்ளது. இது தொழில்நுட்ப போட்டியில் சீனாவை உந்தித்தள்ளும் என கூறப்படுகிறது.