world

சமூக விரோதிகளால் பெண்கள் கொடூரக் கொலை : அர்ஜெண்டினா அரசின் பொறுப்பின்மையே காரணம்

சமூக விரோதிகளால் பெண்கள் கொடூரக் கொலை : அர்ஜெண்டினா அரசின் பொறுப்பின்மையே காரணம்

பியூனஸ் அயர்ஸ், செப்.26- அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் இரண்டு இளம் பெண்கள், ஒரு பதின்ம வயது சிறுமி என மூன்று பெண்களை செப்.19 அன்று சமூக விரோத கும்பல் கடத்தி கொடூரமாக படுகொலை செய்துள்ளது. இந்த சம்பவம் மக்களின் கோபத்தை தூண்டி நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.    கொடுமைகள் நேரலை ஒளிபரப்பு இந்த சித்ரவதையும் கொலையும் ஒரு தனி யார் சமூக ஊடகக் குழுவில் நேரலையில் அந்தக் கும்பல் ஒளிபரப்பியது எனவும், எங்கள் பொருளை திருடுபவர்களுக்கு இதுதான் நிலை என எச்சரிக்கையும் விடுத்தது எனவும் அதிர்ச்சித் தகவலை அம்மாகாண பாது காப்புத்துறை அமைச்சர் ஜேவியர் அலோன் சோ வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் தொ டர்பாக இதுவரை பன்னிரண்டு பேர் கைது  செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தல் கும்பலின் பழிவாங்கும் தாக்கு தலாக இருக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.  வறுமையே குற்றத்திற்கு காரணம்  இந்த செய்தி வெளியான உடனேயே, பல்வேறு சமூக உரிமை, பெண்ணுரிமை அமைப்புகள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்தன. செப். 24 முதல் பல ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.  இந்த படுகொலை வெறும் “பழிவாங்கல்” நடவடிக்கை மட்டுமல்ல. தன்னை டிரம்ப்பின் விசுவாசியாக அறிவித்துக்கொண்ட ஜனாதிபதி மிலெய் தலைமையிலான அரசு கடைப்பிடிக்கும் முதலாளிகளுக்கு ஆதரவான கொள்கைகளே இதற்கு முக்கிய காரணம். மிலெய் ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் வேலையின்மை, பொரு ளாதார நெருக்கடி, பணவீக்கம் உச்சத்தில் உள்ளது.  மோசமான பொருளாதாரச் சரிவின் காரண மாக வருமானமின்றி பெண்கள் கட்டாயமாக பாலியல் தொழிலுக்குள் செல்ல வேண்டிய நிலை உருவாகிவிட்டது. சர்வதேச போதைப்பொருள் கும்பல்கள் இளைஞர்களை மூளைச் சலவை செய்து போதைப்பொருளை கடத்துகின்றனர்.  மனிதக் கடத்தல், பாலின வன்முறைக்கு ஆளானவர்களுக்கு உதவித் திட்டம் மற்றும் சமூகப் பொருளாதாரத் திட்டங்களுக்கு நிதிய ளிக்காமல் மிலெய் அரசு விலகிவிட்டது. இது குற்றவாளிக் கும்பல்கள் வேகமாக வளரவும் குற்றச் சம்பவங்கள் அதிகரிக்கவும் காரணமாக உள்ளது. இந்த குற்றவாளிக் கும்பல்களை கட்டுப்படுத்தாமல் அரசு திரைமறைவில் இவ்வாறு உதவுகிறது என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.