world

img

ஜன.1 அன்று இந்தியாவில் 60 ஆயிரம் குழந்தைகள் பிறப்பு.... யுனிசெப் அறிவிப்பு

நியூயார்க்:
ஜனவரி 1 புத்தாண்டு தினத்தன்று உலகளவில் 3.70 லட்சம் குழந்தைகளும், இந்தியாவில் சுமார் 60 ஆயிரம் குழந்தைகளும் பிறந்திருக்கக்கூடும் என எதிர்பார்க்கிறோம் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது. இதுகுறித்து யுனிசெப் வெளியிட்டுள்ள  அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 

உலகளவில் குழந்தைகள் பிறப்பு என்பது 10 நாடுகள் அடிப்படையாக வைத்து கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 59,995 குழந்தைகள் புத்தாண்டு தினத்தன்று பிறந்திருக்கலாம் என எதிர்பார்க்கிறோம்.அதைத் தொடர்ந்து சீனாவில் 35,615 குழந்தைகள், நைஜிரியாவில் 21,439, பாகிஸ்தானில் 14,161 குழந்தைகள், எத்தியோப்பியாவில் 12,006 குழந்தைகள், அமெரிக்காவில் 10,312 குழந்தைகள் பிறந்திருக்கக் கூடும். 2021 ஆம் ஆண்டை வரவேற்கும் விதத்தில் பிஜி நாட்டில்தான் முதல் குழந்தை பிறந்தது, அமெரிக்காவில் கடைசிக் குழந்தை பிறந்தது.2021 ஆம் ஆண்டில், 14 கோடி குழந்தைகள் பிறக்கும் என்றும் இதில் குழந்தையின் சராசரி வாழ்நாள் வயது 84 ஆகவும், இந்தியாவில் பிறக்கும் குழந்தையின் வாழ்நாள்சராசரி வயது 80.9 ஆகவும் இருக்கும் என்றும்  புத்தாண்டு தினத்தன்று உலகளவில் 3.70 லட்சம் குழந்தைகள் பிறந்திருக்கலாம் எனக் கணிக்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;