டிரம்ப் கொண்டுவந்த மசோதாவால் சுகாதாரப் பாதுகாப்பை இழக்கும் 1.6 கோடி அமெரிக்கர்கள்
முன்னாள் அமெ.ஜனாதிபதி பாரக் ஒபாமா அதிர்ச்சி தகவல்
வாஷிங்டன், ஜூலை 3- அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோ தாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார். இந்த மசோதா மருத்துவ உதவி திட்டத்திற்கு அரசு வழங்கும் நிதியைக் குறைப்பதோடு, ஒபாமாவின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மலிவு விலை பராமரிப்புச் சட்டத்தை பலவீனப்படுத்துவதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கொண்டுவந்துள்ள மசோதா வால் 1.6 கோடி அமெரிக்கர்கள் தங்கள் சுகாதாரப் பாதுகாப்பை இழக்கும் அபா யத்தில் உள்ளனர் என்று பாரக் ஒபாமா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். வரி குறைப்பு நடவடிக்கைக்கு பின், நிதி ஆதாரத்தை திரட்ட, மெடிகாய்ட் (Medicaid) எனப்படும் மருத்துவ உதவிக்கான நிதியை குறைக்கும் மசோதாவை டிரம்ப் அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவை செனட் அங்கீகரித்துள்ளது. இதன் மீதான வாக்கெடுப்பு ஜூலை 4 அன்று நடத்தப்படும் என்று ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்திருந்தார். இந்த நிலையில், மசோதா நிறைவேற்றப்பட்டால் 1.6 கோடி அமெரிக்கர்கள் தங்கள் சுகாதாரப் பாதுகாப்பை இழக்க நேரிடும். எனவே இன்றே உங்கள் பிரதிநிதியை அழைத்து, இந்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கச் சொல்லுங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கூறியுள்ளார். ஒபாமா தனது சமூக வலைதள பதிவில், “மருத்துவ உதவிக்கான கூட்டாட்சி நிதியைக் குறைத்து, மலிவு விலை பராமரிப்புச் சட்டத்தை பல வீனப்படுத்தும் ஒரு மசோதாவை நிறை வேற்ற குடியரசுக் கட்சியினர் தீவிரமாகி வருவதால், 16 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் தங்கள் சுகாதாரப் பாதுகாப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். இந்த மசோ தாவை அவை நிறைவேற்றினால், அது செலவுகளை அதிகரிக்கும் மற்றும் வருங்கால தலைமுறைகளுக்கு தொழி லாளி வர்க்க குடும்பங்களை பாதிக்கும். இன்றே உங்கள் பிரதிநிதியை அழைத்து, இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்கச் சொல்லுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்