வெனிசுலா அரசாங்கம் சர்வதேச பாசிச எதிர்ப்புக்குழுவை அமைத்துள்ளது.
மேற்கு நாடுகள் உட்பட உலகளவில் பாசிச சக்திகள் வெற்றி பெற்று வரும் நிலையில் பாசிச எதிர்ப்பு, காலனித்துவ எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு நோக்கங்களையும் நடவடிக்கைகளையும் ஊக்கப்படுத்தி ஜனநாயகத்தை பாதுகாக்க உலகளாவிய அரசாங்கங்களை ஒன்றிணைக்க நிக்கோலஸ் மதுரோ தலைமையிலான வெனிசுலா இடதுசாரி அரசு இக்குழுவை அமைத்துள்ளது.
உலக மக்களை பாசிசத்திற்கு எதிராக அணிதிரட்டவும், பாசிசத்தை தோற்கடிக்கும் இலக்கை நோக்கி சர்வதேச சமூகத்தை வழிநடத்தவும் அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது.