world

img

இலங்கை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த 11 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளர். இதில் நிலச்சரிவில் மட்டும் 18 பேர் உயிரிழந்ததாக இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. இந்த பேரிடர்களால் 4000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், கும்புக்கனா பகுதியில் பேருந்து ஒன்று வெள்ளத்தில் சிக்கிய நிலையில், 23 பேர் மீட்பு, 10 பேர் காயம், காணாமல் போன 14 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 
இலக்கைக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு ‘ரெட் அலர்ட்’ விடுத்து அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.