ஜெலன்ஸ்கி நன்றி இல்லாதவர்: டிரம்ப் கடும் விமர்சனம்
உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தம் தொடர்பாக முன்மொழியப்பட்டுள்ள வரைவு ஒப்பந்தம் குறித்து அமெரிக்கா, உக்ரைன், ஐரோப்பிய நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தின. வரைவு ஒப்பந்தம் ரஷ்யாவிற்கு சாதகமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் சுவிட்சர்லாந்தில் நடந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா உக்ரைன் ஆகிய இரு நாடுகளின் ஜனாதிபதிகளின் முடிவுகள் அடிப்படையில் கூட்டு முன்மொழிவுகளை உருவாக்க ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு முன் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட தலைவர்கள் நன்றி இல்லாதவர்கள் என்று டிரம்ப் விமர்சித்திருந்தார்.
நைஜீரியாவில் கடத்தப்பட்ட 300 குழந்தைகளில் 50 பேர் தப்பினர்
நைஜீரியாவில் செயின்ட் மேரிஸ் இருபாலர் பள்ளியை ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று தாக்கி 303-க்கும் மேற்பட்ட குழந்தைகளையும் 12 ஆசிரியர்களையும் கடத்திச் சென்றது. அதில் 50 பேர் அவர்களது பிடியில் இருந்து தப்பித்துள்ளதாக ஒரு கிறிஸ்தவ அமைப்பு தெரிவித்துள்ளது. இது நைஜீரியாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய கடத்தல் சம்பவங்களில் ஒன்றாக பதிவாகியுள்ளது. நைஜீரியாவில் பாதுகாப்புக் குறைபாடுகள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் பல பள்ளிகள் மூடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
