world

img

உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்த ஒப்பந்தம் : ஜெலன்ஸ்கிக்கு காலக்கெடு நிர்ணயித்த டிரம்ப்

கீவ்,நவ.22- ரஷ்யா-உக்ரைன் போரை முடி வுக்குக் கொண்டு வருவதற்காக முன்மொழியப்பட்ட 28 அம்ச திட்டத்தை ஜெலன்ஸ்கி ஏற்றுக்கொள் வதற்கு நவம்பர் 27 ஆம் தேதியை காலக்கெடுவாக டிரம்ப் நிர்ண யித்துள்ளார். அமெரிக்கா முன்வைத்துள்ள புதிய வரைவு அமைதி ஒப்பந் தத்தைக் கண்டு உக்ரைன் ஜனாதி பதி ஜெலன்ஸ்கி அதிர்ச்சிய டைந்துள்ளார். அதனால் அத்திட்டத் திற்கு ஒப்புதல் கொடுக்க முடியாத நெருக்கடியில் சிக்கிருப்பதாகக் கூறப்படுகிறது.

உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக்கொண்டு வர அமெ ரிக்கா, ரஷ்யா இணைந்து 28 அம்சங் கள் கொண்ட வரைவு அமைதி ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளன. அமெரிக்க வெளியுறவுத்துறை செய லாளர், அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ரஷ்யா வெளியுறவுத்துறை அதிகாரிகள் இந்த ஒப்பந்த தயாரிப்பில் பணி யாற்றி வருகின்றனர். இந்த ஒப்பந் தத்தில் உக்ரைனின் கோரிக்கைகள் எதுவும் ஏற்கப்படவில்லை. பெரும் பாலான அம்சங்கள் ரஷ்யாவிற்கே சாதகமாக உள்ளது என கூறப் பட்டது.  “உக்ரைன் தனது வரலாற்றி லேயே மிகக் கடினமான தருணங்க ளில் ஒன்றை தற்போது எதிர்கொண் டுள்ளது. இப்போது நம் முன் இரண்டு வழிகள்தான் உள்ளன. ஒன்று நமது கண்ணியத்தை இழப்பது,  அல்லது நமக்கு உதவும் ஒரு முக்கியமான நட்பு நாட்டை (அமெரிக்காவை) இழக்கும் அபா யத்தை எதிர்கொள்வது,” என்று இது குறித்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவை முடக்க வேண்டும்.  சர்வதேச அரசியலில் தனிமைப் படுத்த வேண்டும் என உக்ரைனை பகடைக் காயாக பயன்படுத்தி ரஷ்யா மீது அமெரிக்கா போர்  தொடுத்தது. ஆனால் அமெரிக்கா வின் நோக்கம் வெற்றி பெற வில்லை. மாறாக சீனா மற்றும் ஆப்பி ரிக்க நாடுகளுடன் ரஷ்யா தனது உற வுகளை வலுப்படுத்திக்கொண்டது. தன் இலக்கு நிறைவேறாத நிலையில் சீனா-ரஷ்யா உறவு பலமடைவதை தடுக்க ரஷ்யாவுடன் பொருளாதார உறவுகளை உருவாக்க வேண்டும் என்ற மறைமுக திட்டத்துடனும் அமெரிக்கா போர் நிறுத்தத்தை நோக்கி நகர்கிறது.  தற்போது உருவாக்கப்பட்டுள்ள திட்டமும் உக்ரைனை கைவிட்டு ரஷ்யாவின் கோரிக்கைகளை ஈர்க்கும் வகையிலேயே அமைந்துள் ளது. உதாரணமாக கிரீமியா உட்பட  ரஷ்யா வசம் உள்ள உக்ரைன் நிலங்களை அந்நாடு விட்டுக் கொடுக்க வேண்டும்.  உக்ரைன் நேட்டோ ராணுவக் கூட்டணியில் சேருவதற்கான முட்டுக்கட்டை. உக்ரைன் தனது ராணுவத்தின் அள வைக் குறைப்பது உள்ளிட்ட அம்சங்கள் அதில் இடம்பெற்றுள் ளன. இத்திட்டம் ஜெலன்ஸ்கியை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

கடந்த கால போர் நிறுத்த பேச்சு வார்த்தைகளில் ஜெலன்ஸ்கி ஒத்து ழைக்காத நிலையில் அமெரிக்கா வின் ராணுவ உதவியை நிறுத்து வதாக டிரம்ப் போக்குக் காட்டினார். அச்சூழலில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு அனைத்து உதவிகளையும் செய்தன. இந்த ஒப்பந்தத்தை உக்ரைன் ஏற்காத நிலையில்   ஐரோப்பிய நாடுகளின் உதவியை நாடலாம் எனவும் கூறப்படுகிறது. அமெரிக்காவின் இந்தத் திட்டம் ஐரோப்பிய தலைவர்களையும் சற்று தயக்கத்திற்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் டிரம்ப்பை பகைத்துக் ்கொள்ள வேண்டாம் என்பதற்காக இந்த ஒப்பந்தம் குறித்து அவர்கள் வெளிப்படையாக கருத்துக்கள் எதுவும் தெரிவிக்காமல் உள்ளனர்.