தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களை நவம்பர் 21 முதல் அமல்படுத்திய மோடி அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, நவம்பர் 26 அன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. நவம்பர் 20 ஆம் தேதி மத்திய அமைச்சரைச் சந்தித்த பின்னரும் மறுநாளே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10 மத்திய தொழிற் சங்கங்களும், 70 சம்மேளனங்களும் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
சட்டத் தொகுப்பின் பின்னணி
இருந்த 44 தொழிலாளர் நலச் சட்டங்க ளில், 29 சட்டங்களை இணைத்து 4 தொ குப்புச் சட்டங்களாக (Codes) மோடி அரசு 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் நாடாளு மன்றத்தில் போதிய விவாதமின்றி நிறை வேற்றியது. இவற்றுக்கான மத்திய விதிக ளும் உருவாக்கப்பட்டு விட்டன. இது பொதுப் பட்டியலில் உள்ள விவகாரம் என்பதால், பல மாநில அரசுகள் தங்களது விதிகளையும் உருவாக்கிவிட்டன. “2025 ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தியே தீருவோம்” என்று மோடி அரசு அறிவித்திருந்தது. மோடி அரசு பதவிக்கு வந்ததில் இருந்து 2015-க்குப் பிறகு ஆண்டுதோறும் கூட்டப்பட வேண்டிய முத்தரப்பு தொழிலாளர் மாநாடு (Tripartite Labour Conference) கூட்டப் படவே இல்லை. இதனால், தொழிலாளர்க ளின் கருத்துகள் அங்கு கேட்கப்படவில்லை. தொகுப்புச் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தொழிலாளர்கள் பல தேசிய வேலை நிறுத்தங்களைச் செய்துள்ளனர். கடைசி யாக, ஜூலை 9 அன்று 25 கோடி தொழிலா ளர்கள் பங்கெடுத்த வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடந்ததைத் தொடர்ந்தே, மேற்கண்ட சட்டங்கள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன. இந்தச் சட்டங்கள் இப்போது அவசரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன.
மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள்
பல மாநில அரசுகள் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைச் சட்டங்கள் மூலமும் அவசரச் சட்டங்கள் மூலமும் எடுத்து வரு கின்றன.
பாஜக ஆளும் உ.பி., குஜராத், ம.பி. போன்ற மாநிலங்கள் பெரும்பாலான தொழிலாளர் நலச் சட்டங்களை அமல் படுத்துவதில் இருந்து தொழிற்சாலை களுக்கு விலக்களித்துள்ளன.
உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் அவசரச் சட்டம் மூலம் ஒரு நாளில் 12 மணி நேர வேலையை திணித்துள்ளன.
மகாராஷ்டிரா சட்டத் திருத்தம் மூலமும், மத்தியப் பிரதேசம் நிர்வாக உத்தரவு மூலமும் 12 மணி நேர வேலையைத் திணித்துள்ளன.
காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் 10 மணி நேர வேலையைத் திணித்தார்கள் (தொழி லாளர் போராட்டத்தால் திரும்பப் பெறப் பட்டது). ஓவர்டைம் வரம்பை 3 மாதத்தில் 50இல் இருந்து 144 மணி நேரமாக உயர்த்தினர். (தொகுப்புச் சட்டத்தில் இது 125 மணி நேரம்).
தமிழ்நாடு வேலை நேர விதிகளையே ரத்து செய்து, முதலாளிகள் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் வேலை வாங்க அனுமதி அளித்தது, பின் தொழிலாளர் போராட்ட முடிவால் நிறுத்திவைக்கப்பட்டது. இன்ஃபோசிஸ் முதலாளி வார வேலை நேரத்தை 48லிருந்து 70 மணி நேரமாக்க வேண்டும் என்றதும், எல் & டி முதலாளி 90 மணி நேரமாக்க வேண்டும் என்றதும் வெறும் பேச்சல்ல; இதுவே இந்த அரசு களுக்கு வழிகாட்டி யாக உள்ளது.
தொகுப்புச் சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம்?
விவசாயச் சட்டங்களின் பாதிப்பை விவ சாயிகள் நன்கு உணர்ந்து போராடி முறி யடித்தது போலவே, இந்தத் தொகுப்புச் சட்டங்களின் ஆபத்தை தொழிலாளர்கள் உணர்ந்துகொள்வது அவசியம்.
1 ‘தொழில்’ வரையறைச் சுருக்கம்:
உச்சநீதிமன்றம் முன்னர், தொண்டு நிறு வனங்கள், சமூக நிறுவனங்கள் உட்பட மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிறுவனங்களையும் ‘தொழில்’ என அங்கீ கரித்திருந்தது.
புதிய தொகுப்புச் சட்டம், அத்தகைய நிறு வனங்கள் ‘தொழில்’ கிடையாது என்கிறது. இதனால், அத்துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொழில் தகராறு எழுப்ப முடியாது.
அங்கன்வாடி, ஆஷா, சத்துணவு, தகவல் தொழில்நுட்பம் (IT), கிக் தொழில்கள் ஆகி யவை ‘தொழில்’ என்ற வரையறைக்குள் வராது.
2 வேலை நிறுத்த உரிமை பறிப்பு:
தற்போது பொதுப் பயன்பாட்டுத் தொழில்க ளுக்கு மட்டுமே வேலை நிறுத்த நோட்டீஸ் கட்டாயம் என்ற விதி இருந்தது.
புதிய தொகுப்புச் சட்டம், அனைத்துத் தொழில்களிலும் வேலை நிறுத்த நோட்டீஸ் கட்டாயம் என்று ஆக்கிவிட்டது. நோட்டீஸ் கொடுத்தால் சமரசப் பேச்சுவார்த்தை, பேச்சுவார்த்தை நடக்கும்போது, லேபர் கோர்ட்டில் இருக்கும்போது வேலை நிறுத்தம் சட்டவிரோதம் ஆக்கப்படும்.
அப்படி, “சட்டவிரோத” வேலை நிறுத்தம் செய்தால் ₹1,000 முதல் ₹10,000 வரை அபராதம் அல்லது ஒரு மாதச் சிறை. தூண்டினால் ₹10,000 முதல் ₹50,000 அபராதம். எனவே, இந்த நாட்டில் இனி வேலை நிறுத்தமே சட்டவிரோதம் என்று ஆகும்.
3 ஆலை மூடல் மற்றும் நிலையாணையில் முதலாளித்துவம்:
H தற்போது 100 தொழிலாளர்களுக்கு குறை வாக இருந்தால் ஆலையை மூட அரசின் அனுமதி தேவையில்லை. H தொகுப்புச் சட்டம் இந்த வரம்பை 300 தொ ழிலாளர்கள் என்று உயர்த்துகிறது. இத னால் 90% தொழிற்சாலைகள் இந்தச் சட்டத்தில் இருந்து விலக்குப் பெறு கின்றன. மத்திய/மாநில அரசுகள் நினைத் தால் இந்த வரம்பை எவ்வளவு வேண்டு மானாலும் உயர்த்திக் கொள்ளவும் சட்டம் அனுமதிக்கிறது. Hதொழிலாளர் உரிமைகளை நிர்ண யிக்கும் நிலையாணை (Standing Order) சட்டமும் இதேபோல 100லிருந்து 300 தொழிலாளர்கள் என்ற வரம்புக்கு உயர்த் தப்பட்டு, 90% ஆலைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் முதலாளி வைத்ததுதான் சட்டம் என்ற நிலை உருவாகும்.
4 ஒப்பந்த முறை திணிப்பு:
H நிரந்தரத் தன்மை கொண்ட வேலையிலும் ஒப்பந்த முறையைத் தொகுப்புச் சட்டம் புகுத்துகிறது. Hஒப்பந்தத் தொழிலாளர் சட்டம் பொருந்தும் நிறுவனங்களின் வரம்பை 20 தொழி லாளர்களுக்கு மேல் என்பதிலிருந்து 50 தொழிலாளர்களுக்கு மேல் என உயர்த்தியுள்ளது.
H குறித்த கால ஒப்பந்த முறையை (Fixed Term Employment) சட்டப்படி ஆக்கி விட்டது. முதலாளிகளுக்கே அதிகாரம் தொகுப்புச் சட்டங்கள் நிறைவேறியவுடன் மோடி சொன்னது: “இவை முதலாளிகள் அமல்படுத்த வேண்டிய அம்சங்களையும் சிவப்பு நாடாவையும் இன்ஸ்பெக்டர் ராஜ்ஜி யத்தையும் குறைத்து முதலாளிகளை எதிர்காலத்தில் அதிகாரம் படைத்தவர்களாக மாற்றும் சட்டங்களாகும்.” இந்தச் சட்டங்களின் நோக்கம் வெளிப் படையானது. எனவே, இந்தத் தொகுப்புச் சட்டங்களை தூக்கி எறிய வேண்டும் என்று சிஐடியு உள்ளிட்ட அனைத்துச் சங்கங்களும் போராடுகின்றன. விவசாயிகளைப் போலவே தொழிலா ளர்களும் வெல்வார்கள்.
