ஈரோடு, நவ.22- கவுந்தப்பாடி ஊராட்சி யில் குடிநீர் தொட்டி அமைக்க நிதி ஒதுக்கக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயனிடம் அப்ப குதி பொதுமக்கள் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், பவானி ஒன்றியம், கவுந்தப் பாடி ஊராட்சிக்குட்பட்டது பெருமாம்பாளை யம் காலனி. இங்கு வசிக்கும் மக்களுக்கு மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் மற்றும் இதர பயன்பாடுகளுக்கு தண்ணீர் விநியோ கிக்கப்படுகிறது. ஒரே தொட்டியில் ஆற்றிலி ருந்து வரும் தண்ணீரை ஏற்றி குடிநீராக வும், ஆழ்துளை கிணற்றிலிருந்து பெறும் தண்ணீரை ஏற்றி இதர பயன்பாடுகளுக் குமானவையாக விநியோகிக்கின்றனர். இவ் வாறு விநியோகிக்கப்படும் தண்ணீர் பாது காப்பானதாகவும், போதுமானதாகவும் இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் ஊராட்சி மன்றத்தினை நாடினர். மனு கொடுத்துப் பேசியும் பிரச்சனை தீர்க்கப்பட வில்லை. தற்சமயம் நிர்வாகம் தனி அலுவ லரிடம் உள்ள நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலரை அணுகினர். நிதி இல்லாததால் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் சிரமம் உள் ளது எனக்கூறியதாகத் தெரிகிறது. இந்நிலையில், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயனிடம் அப்பகுதி மக்கள் சனியன்று மனு அளித்தனர். அப் போது, பழுதடைந்த தண்ணீர் தொட்டிக்கு மாற்று தொட்டி கட்டிக்கொடுக்க வேண்டும். அத்துடன் சமுதாயக் கூடம் அமைக்கவும் நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டுக் கொண் டுள்ளனர். மனுவைப் பெற்றுக் கொண்ட சுப்ப ராயன், 2026 ஆம் ஆண்டுக்கான நிதி ஜனவரி மாதத்தில் இறுதி செய்யும்போது ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியதாக அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க பவானி தாலுகா செயலாளர் எஸ்.மாணிக்கம் தெரி வித்தார்.
