districts

img

செம்மொழி பூங்காவின் இறுதிக்கட்டப் பணிகள் நவ.25 இல் முதல்வர் திறந்து வைக்கிறார்

கோவை, நவ.22– காந்திபுரம் மத்திய சிறைச் சாலை வளாகத்தில் அமைக்கப் பட்டு வரும் செம்மொழி பூங்காவின் இறுதிக்கட்டப் பணிகளை சனி யன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டார். கோவை மாவட்டம், காந்தி புரம் மத்திய சிறைச்சாலை அருகே உள்ள வளாகத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மூலிகைத் தோட்டங் கள், நீரூற்றுகள், செயற்கை மலைக் குன்றுகள், உணவகம், படிப்பகம், குழந்தைகள் விளையாட்டு மைதா னம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளு டன் அமைக்கப்பட்டு வரும் செம் மொழி பூங்காவை வரும் 25 ஆம்  தேதி காலை 11 மணிக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில், செம்மொழி பூங்காவின் இறுதிக்கட்டப் பணி களை சனியன்று நகராட்சி நிர்வா கத்துறை அமைச்சர் கே.என். நேரு  நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பூங்காவின் அனைத்துப் பணிக ளும் சிறப்பாக நடைபெற்று வரு கின்றன. திட்டமிட்ட தேதிக்குள் முழுமையாக முடிக்கப்படும். மழை பெய்தாலும் 25 ஆம் தேதி காலை  11 மணிக்கு முதலமைச்சர் திறந்து வைப்பார். அதன் பிறகு முக்கிய  தொழிலதிபர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட 150 பேரைச் சந்தித்து பேசுவார். பூங்காவைப் பார்வை யிட்ட பின்னர் பள்ளி மாணவர்களி டமும் உரையாடுவார். பொதுமக்க ளுக்கு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் பூங்கா திறக்கப்படும்”. மேலும், “அவசர அவசர மாகப் பணிகள் நடக்கவில்லை. மெதுவாகச் செய்தால் மெதுவாகச் செய்கிறீர்கள் என்கிறார்கள். வேக மாகச் செய்தால் ஏன் வேக மாகச் செய்கிறீர்கள் என்று கேட்கி றார்கள். எல்லாம் சிறப்பாகத்தான் நடக்கிறது” என்றார். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் பவன் குமார், ஆணையர் சிவகுரு பிர பாகரன், முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.