நாமக்கல், நவ.22- அரசுப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் இருப்பதால் மாணவ, மாணவிகள் அச்சமடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம் காடச்சநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட விளாங்காட்டூர் பகுதியில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பெற்று வருகின்றனர். இந்நிலையில் போதிய மாணவ, மாணவியர் இல்லாமல் குறைவான எண்ணிக்கையில் அரசு பள்ளி செயல்பட்டு வரும் நிலையில், இந்தப் பள்ளி யின் மேற்கூரை மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் காலை உணவு திட்டத்திற்கு சமையல் செய்ய பயன்படும் அடுப்பு மற்றும் கேஸ் சிலிண்டர் ஆகியவை மாணவ, மாணவிகள் கல்வி கற்கும் இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது. இது மாணவ, மாணவியரின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. பள்ளியின் பல்வேறு இடங்களில் விரிசல் காணப்படுவதால் மாணவ, மாணவியர் அச் சத்துடன் கல்வி பயின்று வருகின்றனர். எனவே பள்ளியை முழுமையாக சீரமைத்து, பழுதடைந்த கட்டடங்களுக்கு மாற்றாக புதிய கட்டடங்களை கட்டித்தர வேண்டும் என மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
