districts

பெள்ளட்டி மட்டத்தில் தேயிலை பறிக்க தடை விதிப்பு

உதகை, நவ.22- தேயிலைத் தோட்டங்கள் வழியாக யானைகள் புதிய வழித்தடத்தில் வருவதால், பெள்ளட்டி மட்டம் பகுதியில் தொழிலாளர் கள் தேயிலை பறிக்க வனத்துறையினர் தற் காலிகமாக தடை விதித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த வாரம் சாரல் முதல் மிதமான மழை பெய்த தால், வனப்பகுதிகளும், தேயிலைத் தோட் டங்களும் தற்போது பசுமைக்கு திரும்பி யுள்ளன. இதனால் யானை கூட்டம் தற்போது  பல குழுக்களாக பிரிந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வழியாக நகருக்குள் உலா வருகின்றன. கடந்த 5 நாட்களுக்கு முன்பு பர்லியார் பகுதியில் சுற்றித்திரிந்த 6 யானைகளை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். தற் போது அக்கூட்டத்திலிருந்து 2 யானைகள் மட்டும் தனியாக பிரிந்து புதிய வழித்தடங் களை அறிந்து, முத்திரி எஸ்டேட், ஆடர்லி,  மேல்கரன்சி போன்ற பகுதிகளை கடந்து தற்போது பெள்ளட்டி மட்டம் தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ளன. பெள்ளட்டி மட்டத்தை சுற்றி அனக்காடு, கோடமலை, டிரம்ளா எஸ்டேட் போன்ற தேயிலைத் தோட்டங்கள் அதிகளவில் இருப்பதால், அந்த இடத்திற்கு தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்களுக்கு வனத்துறையினர் தற்காலிகமாக தடை விதித்துள்ளனர். தேயி லைத் தோட்டங்களில் யானைகள் நடமாட்டம் இருப்பதாக கூறி சம்பந்தப்பட்ட கிராம பகுதிக ளில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்ப டுத்தப்பட்டு வருகிறது. முதன்முறையாக, பெள்ளட்டி மட்டத்தில் யானைகள் முகாமிட் டுள்ளதால் தேயிலைத் தோட்ட விவசாயிக ளும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ள னர். குன்னூர் வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நுழையாதவாறு காட்டுக்குள் விரட்டியடிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடு பட்டு வருகின்றனர். தங்கள் பகுதியில் யானை கள் நடமாட்டம் இருப்பது தெரியவந்தால் அதுபற்றி பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். யானை களை புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என  குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.