states

ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கான காலக்கெடுவை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்க வேண்டும்

ஆளுநர்களையும் குடியரசுத் தலை வரையும் “எல்லோருக்கும் ஒரே மாதிரியான” (one-size-fits-all) காலக்கெடுவுக்குள் நீதித்துறையால் கட்டுப் படுத்த முடியாது என்றும், மாநிலங்களின் மசோ தாக்களுக்கு “ஒப்புதல் அளித்ததாகக் கருதப் படும்” (deemed consent) முறையை ஏற்ப தன் மூலம் அவர்களின் அதிகாரங்களை அப கரிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் கூறி யுள்ளது. மேலும், அரசியலமைப்பு அதிகாரி கள் மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் “தவிர்க்கும் நோக்கில் நீண்ட காலம் கிடப்பில் போடக்கூடாது” என்றும் தெளிவு படுத்தியுள்ளது. 16-ஆவது குடியரசுத் தலைவர் குறிப்பிற்கு (Presidential Reference) உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்த விடை, மேலோட்டமாகப் பார்க்கையில் அரசியல மைப்புச் சமநிலையைப் பேணுவது போல் தோன்றுகிறது. ஆனால், சாராம்சத்தில், இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு விழுந்த பலத்த அடியாகும். ஏனெனில், இது ஆளுநர்களுக்கு மாநிலச் சட்டங்களைத் தடுக்கவோ அல்லது தாமதப் படுத்தவோ, எவ்வித அரசியலமைப்புப் பொ றுப்புணர்வுமின்றி, கட்டுப்பாடற்ற அதிகாரத்தை வழங்குகிறது. கடந்த ஏப்ரல் 2025-இல் வழங்கப்பட்ட முற்போக்கான தீர்ப்பில்,  மூன்று மாத காலக்கெடு விதிக்கப்பட்டதுடன், சட்டப்பிரிவு 142-ஐப் பயன்படுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சில மசோதாக்களுக்கு “ஒப்புதல் அளிக்கப்பட்ட தாக” கருதப்பட்டது. தற்போதைய கருத்து அதற்கு முரணாக உள்ளது. அதிகாரப் பிரி வினை (Separation of Powers) கோட் பாட்டைக் காரணம் காட்டி, காலக்கெடு நிர்ணயிப்பதையும் அரசியல் சட்டப்பிரிவு 142-ன் பயன்பாட்டையும் நீதிமன்றம் நிராக ரித்துள்ளது. இது மாநில உரிமைகளை காவு கொடுத்து ஆளுநர்களுக்கே அதிகாரம் அளிப்பதாக உள்ளது.

சட்டப்பிரிவு 200 மற்றும் 201-இல் காலக் கெடு எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று இத்தீர்ப்பு கூறுகிறது; ஆனால் அரசியல மைப்பின் தெளிவான வாசகங்களை இது புறக்கணிக்கிறது. சட்டப்பிரிவு 200-இன் படி, ஆளுநர் தனது முடிவை “கூடிய விரை வில்” (as soon as possible) அறிவிக்க வேண்டும். ஆனால், இந்த வாசகம் “மிகவும் நெகிழ்வானது” என்று கூறி, காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாது என நீதிமன்றம் கூறி யிருப்பது, அரசியலமைப்பின் கூற்றை செயல்படுத்த முடியாததாக மாற்றியுள்ளது. ஆளுநர்கள் அமைச்சரவையின் “உதவி மற்றும் ஆலோசனைக்குக்” கட்டுப்பட்டவர்கள் அல்ல என்ற நீதிமன்றத்தின் வாதம் அரசிய லமைப்பு வரலாற்றுக்கு முரணானது. 1935-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தில்  இருந்த “தனது விருப்பப்படி” (in his discretion) என்ற சொற்றொடரை, சட்டப்பிரிவு 200 மற்றும் 201-லிருந்து அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் வேண்டும் என்றே நீக்கினர் என்பதைக் கவனிக்க வேண்டும். சர்க்காரியா ஆணையம் கூட, மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க ஆறு மாத காலத்தைப் பரிந்துரைத்தது.

மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காதபோது, அதைச் சட்டமன்றத்திற்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், சட்டமன்றம் மசோதாவை இரண்டாம் முறையாக நிறைவேற்றினாலும், அதைக் குடி யரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஒதுக்கி வைக்கும் அதிகாரத்தை ஆளுநர் தக்க வைத்துக் கொள்கிறார் என்றும் இத்தீர்ப்பு கூறுகிறது. இது, சட்டமன்றம் இரண்டாவது முறை ஒரு மசோதாவை நிறைவேற்றும்போது இருக்கும் கட்டாயத் தன்மையை (binding nature) இல்லாமல் செய்கிறது. இதன் விளை வாக, முதல் முறையாகவோ அல்லது மறுபரிசீலனைக்குப் பின்னரோ, ஒரு ஆளுநர் சட்டப்பிரிவு 200-ன் கீழ் ஒரு மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க முடியும். அங்கு சென்ற பின், குடியரசுத் தலைவ ருக்கு நீதிமன்றத்துடன் கலந்தாலோசிக்கும் கடமை இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டதால், மசோதாக்கள் காலவரையின்றி முடங்கிக் கிடக்கலாம். மசோதாவை மீண்டும் நிறை வேற்றி அதைச் சட்டமாக்கச் சட்டமன்றத்திற்கு எந்த வழியும் இல்லை. மேலும், எப்போது ஒரு மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது பொருத்தமானது என்பது குறித்து இத்தீர்ப்பு எந்த வழிகாட்டுதலையும் வழங்கவில்லை. “நீடித்த செயலற்ற தன்மைக்கு” எதிராக “வரையறுக்கப்பட்ட ஆணை” (limited mandamus) பற்றி இத்தீர்ப்பு பேசினாலும், “நியாயமான காலம்” என்றால் என்ன என்பதை வரையறுக்க மறுக்கிறது. இது மாநிலங்களை, ஆளுநர் தரப்பு தாமதத்தை நிரூபிக்கச் சட்டப் போராட்டங்களில் ஈடுபட வைக்கிறது.

செயல்முறைப் பாதுகாப்புகள் (காலக்கெடு மற்றும் கருதப்பட்ட ஒப்புதல்), அசாதாரணத் தீர்வுகள் (சட்டப்பிரிவு 142), மற்றும் மேற் பார்வை (சட்டப்பிரிவு 200-ன் கீழான நீதித்துறை ஆய்வு) ஆகியவற்றை நீக்குவதன் மூலம், நீதிமன்றத்தின் கருத்து, நிர்வாகத் துறையின் அதிகார அத்துமீறலுக்கான (executive overreach) சாத்தியத்தை அனு மதித்துள்ளது. தன்னிச்சையான தாமதங்க ளை எதிர்த்து கேள்வி கேட்க மாநிலங்களுக்குப் போதிய வழிமுறைகள் இல்லை; நியாயமான காலத்திற்குப் பிறகு இயல்பான ஒப்புதலும் இல்லை; மாநிலப் பட்டியலின் கீழ் உள்ள விஷ யங்களில் கூட மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் போது சட்டப் பூர்வத் தீர்வும் இல்லை. இச்சூழ்நிலைகள் சமீ பத்தில் பல எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் நடந்துள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தின் வார்த்தைகளை (letter), அதன் உயிர்ப்பான அம்சங்களுக்கு (spirit) எதிராகத் திருப்புவ தற்கான ஒரு வழியை நீதிமன்றம் கண்ட றிந்துள்ளதாகவே தோன்றுகிறது.

தி இந்து (ஆங்கிலம்) தலையங்கம், 22.11.25ss
தமிழில் : ராஜூ பாய்