articles

img

பீகார் : தேர்தல் முடிவுகளும் அதன் பின்விளைவுகளும்

பீகார் சட்டமன்றத் தேர்தல் நமது நாட்டின் தேர்தல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும். ஜூன் 25 அன்று அறிவிக்கப்பட்ட சிறப்புத் தீவிரத் திருத்தத்தின்  பின்னணியில் நடத்தப் பட்ட இது, வயது வந்தோர் வாக்குரி மைக்கான புதிய அடிப்படை விதிகளை வகுத்திருக்கிறது. அரசமைப்புச்சட்டத்தை உருவாக்கு வதற்காக, அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற விவாதங்கள், ‘மக்களால், மக்களுக்காக, மக்களின்’ (‘by the people, for the people and of the people’) ஜனநாயகமாக அது இருக்க வேண்டும் என்கிற முறையில் அரச மைப்புச்சட்டத்தை வடிவமைத்தது.

சுதந்திரமான அமைப்பாக...

தேர்தல் ஜனநாயகம் அதன் அடித்தள மாகும். குடிமக்களின் பங்கை அதன் அடித்தளமாகக் கொண்ட சுதந்திரப் போராட்டத்தின் மரபை அடிப்படையாகக் கொண்டது இது. சாதி, மதம், மொழி, கலாச்சாரம் மற்றும் தோற்றம் ஆகிய வற்றைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு இந்திய குடிமகனும் ஒரு வாக்கு மட்டுமே வைத்திருக்க வேண்டும். இந்த ஏற் பாட்டை ஒன்றாக வைத்திருக்க, இந்திய தேர்தல் ஆணையம் உண்மையிலேயே சக்திவாய்ந்த மற்றும் சுதந்திரமான அர சமைப்புச்சட்டத்தின் கீழான அமைப் பாக அதிகாரம் பெற்றது. இந்திய ஜனநாயகம் மற்றும் அதன் அரசமைப்புச்சட்டத்தின் எதிர்காலத்தை குடிமக்கள் தீர்மானிக்க, இரண்டு எளிய கொள்கைகளை வழங்குவதன் மூலம், தேர்தல் ஆணையம் உதவ வேண்டும். முதலாவதாக, தேர்தல் ஆணையத்தின் இயந்திரத்தால், அரசியல் கட்சிகள் அல்லது அரசாங்கங்களின் விருப்பங்க ளுக்கு விடாமல், தேர்தல் ஆணையமே வாக்காளர் பட்டியலை உருவாக்கிட வேண்டும். எனவே, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுவது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாக இருக்க வேண்டும். தனிப்பட்ட குடிமக்களுக்கு அதில் எந்தச் சுமையும் இல்லை. இரண்டாவதாக, இந்திய குடிமக்கள் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்க ளாக இடம்பெறுவார்கள் என்று மறைமுக மாகக் கூறப்பட்டாலும், குடியுரிமையை நிர்ணயிக்கும் பணியிலிருந்து தேர்தல் ஆணையம் விலக்கி வைக்கப்பட்டது. ஏதேனும் சர்ச்சை எழுந்தால், உள்துறை அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து அதைத் தீர்க்க வேண்டும்.

2 அடிப்படைகளிலிருந்தும் விலகல்...

முதல் முறையாக, தேர்தல் ஆணை யம் பீகாரில் நடைபெற்ற தேர்தலின் போது சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் மூலம் இந்த இரண்டு அடிப்படைகளிலி ருந்தும் விலகியது.  வாக்காளர்கள் ஒரு விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதன் மூலம் வாக்கா ளர் பட்டியலில் தங்கள் பெயரை உறுதி செய்ய வேண்டும் என்றும், எந்த சர்ச்சை யும் இல்லாவிட்டாலும், வாக்களிக்கும் தகுதிக்காக தலைமைத் தேர்தல் ஆணை யம் பரிந்துரைத்த ஆவணங்களை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், சிறப்புத் தீவிரத் திருத்தம் கருதியது. குடியுரிமை திருத்தச் சட்டத்தால் கருதப் பட்டபடி, தேர்தல் ஆணையம் பரிந்து ரைத்த ஆவணங்கள் தேசிய குடியுரி மைப் பதிவேட்டின்  தேவைகளை அசாதா ரணமாக ஒத்திருந்ததால், இது இரண்டா வது கொள்கையையும் ஒன்றோடொன்று இணைத்தது.

குடியுரிமை சர்ச்சை கொல்லைப்புற வழியில்...

இதன் மூலம், குடியுரிமை தொ டர்பான சர்ச்சை வெடித்து, குழப்ப மான கேள்விகளால் தேங்கி நின்றி ருந்தது, மீண்டும் கொல்லைப்புறக் கதவு  வழியாக மீண்டும் அரங்கேற்றப் பட்டிருக்கிறது. இது பீகாரில் பெரும் போராட்டத்திற்கு வழிவகுத்தது. நாடு முழுவதும் விவாதம் வெடித்தது. குடியுரிமைக்கு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட எந்த ஒரு ஆவணமும் இல்லாததுதான் முக்கியப் பிரச்சனை. முன்மொழியப்பட்ட சிறப்புத் தீவிரத் திருத்தம், பிரிவினையின் அதிர்ச்சியை மறைமுகமாக மீண்டும் தூண்டியது. நெருக்கமான கேள்விகளில், குடியு ரிமைக்கும் வாக்காளர் பட்டியல்களை இறுதி செய்வதற்கும் இடையிலான தொடர்பை தேர்தல் ஆணையம் மறுத்தது. ஆனால் உண்மையில், மாற் றப்பட்டதற்கான காரணங்கள் மிகவும் தெளிவாகத் தெரிந்தன.

பிழைகளை சரி செய்வதல்ல, வாக்குரிமையைப் பறித்தல்

எனவே, இந்தப் பயிற்சியின் தொ டக்கத்தில், இது வாக்காளர் பட்டிய லில் உள்ள பிழைகளைச் சரிசெய்வ தற்கான ஒரு பயிற்சி அல்ல, மாறாக பெருமளவில் விலக்குதல் மற்றும் வாக்கு ரிமையை பறித்தல் என்பது தெளிவாகத் தெரிந்தது. வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் அதன் இறுதி வடிவம் சர்ச்சை யை மேலும் தீவிரப்படுத்தியது, வாக்கா ளர்களின் எண்ணிக்கையில் குறைவு மிகவும் தெளிவாகத் தெரிந்தது. சிறப்புத் தீவிரத் திருத்தச் செயல்முறை யின் அரசமைப்புச்சட்ட அடிப்படைக ளை உச்சநீதிமன்றம் இன்னும் உறு திப்படுத்தவில்லை. இந்த செயல்முறை  வாக்காளர்களில் பெரும் பகுதியினரி டையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது என்பது தெளிவு. பீகாரில், அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மிகக் குறுகிய கால அவகாசம் இருப்பதால், இது நிச்சயமாக நடக்கும். இறுதி வாக்காளர் பட்டியல் எல்லை மாவட்டங்களில் சிறு பான்மை மதங்களைச் சேர்ந்தவர் கள் மிகப் பெரிய அளவில் நீக்கப்பட்டி ருப்பதையும், பெண் வாக்காளர்கள் அதிக அளவில் சேர்க்கப்பட்டிருப்ப தையும் காட்டியுள்ளது.

ஆளும் கட்சியின் பக்கம் சாய்ந்த ஆணையம்

சிறப்புத் தீவிரத்  திருத்தத்துடன், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுக ளும் ஆழ்ந்த அளவில் கவலைகொள்ள வைத்திருக்கிறது. தேர்தல் ஆணை யத்தின் நடத்தை திறமையின்மை மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததோடு மட்டுமல்லாமல், ஆளும் கட்சிக்குப் பயனளிக்கும் விதத்தில் அதன்பக்கம் சாய்ந்திருந்ததும் தெளிவாகத் தெரிந் தது. தேர்தல் நடத்தை விதிகளைக் கண்காணித்த விதத்தில் இது அப்பட்ட மாகத் தெரிந்தது. பாஜக-ஐக்கிய ஜனதா தள அரசாங்கம் தேர்தல் அறி விக்கப்படுவதற்கு சற்று முன்பு, ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய்  வரவு வைக்கும் முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்பு திட்டத்தைத் (Mukhyamantri Mahila Rojgar Yojana) தொடங்கியது. 14,000 கோடி ரூபாய் உடனடியாக வழங்கப்பட்ட இந்தப் பெரிய அளவிலான நேரடி நன்மை, தேர்தல் சமயத்தில் வாக்கா ளர்களுக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு அரசே வாக்குகளை விலைகொடுத்து வாங்கும் செயலில் (‘state client elism’) ஈடுபட்டது. ஏழை வாக்காளர்கள் தனிப்பட்ட கட்சிகளின் வாடிக்கையா ளர்களாகவும், வேட்பாளர்கள் ஒட்டு மொத்த அரசியல் தேர்வை ஆணையி டும் வேட்பாளர்களாகவும் இருந்த கடந்த காலத்திலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது.

மோடியின் முரண்பாடு

இது தவிர, 125 யூனிட்கள் வரை இலவச மின்சாரம், சமூகப் பாதுகாப்பு  ஓய்வூதியங்களை மூன்று மடங்காக  உயர்த்துதல் மற்றும் ஒரு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகிய வையும் ஆளும் கூட்டணியால் வழங்கப் பட்ட வாக்குறுதிகளாகும். நிச்சயமாக, இதுபோன்ற உறுதிமொழிகள் பிரதமர்  மோடி ‘ரெவ்டி’ அரசியல் (‘revdi’ politics) மற்றும் எதிர்கால பொருளா தார நிலைமையில் அதன் தாக்கம்  குறித்து கூறி வந்ததற்கு முரணானவை களாகும். ஏற்கெனவே, இதுபோன்ற அறி விப்புகளுக்கும் உண்மையான தேர் தல்களை நடத்துவதற்கும் இடையே ஒரு நியாயமான இடைவெளியைச் சேர்க்க தேர்தல் நடத்தை விதியை மீண்டும் வரைவது குறித்து கேள்விகள் எழுப் பப்படுகின்றன. இத்தகைய முயற்சிகள் உண்மையில் மக்களின் நீண்டகால நல்வாழ்விலிருந்து கவனத்தைத் திசை திருப்பின. ஆனால் பொதுமக்களின் கருத்தை, குறிப்பாக மிகவும் துன்பப் பட்டவர்களிடையே, உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தன என்பது தெளிவாகிறது.

பெண் வாக்காளர்கள்...

தேர்தல் முடிவுகள் முரண்பாடாக, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், அவர்கள் ஒப்பீட்ட ளவில் அதிக எண்ணிக்கையில் வாக்க ளித்துள்ளனர் என்பதையும், இறுதி முடி வில் மிகவும் தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்பதையும் காட்டு கின்றன. இந்தப் போக்கு முன்பே கூட வெளிப்பட்டு வந்தது. ஆனால், சிறப்புத் தீவிரத் திருத்தம்  மற்றும் ஒப்பீட்டளவில் அதிக எண்ணிக்கையிலான ஆண் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இல்லா தது ஆகியவற்றுடன் இணைந்து, இது மேலும் பெருகியுள்ளது. ஊதியம், வருமா னம், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் பிற சமூக  குறியீடுகளின் அடிப்ப டையில் பீகார் பெரும்பாலான முக்கிய இந்திய மாநிலங்களை விட பின்தங்கி யிருந்தாலும், வளர்ச்சியின் உண்மை யான பிரச்சனைகளிலிருந்து அது துண்டிக்கப்பட்டிருப்பது இன்னும் தெளி வாகத் தெரிகிறது, முடிவுகளை விளக்க வும் ஆளும் கூட்டணியின் பெரிய வெற்றி யை உறுதிப்படுத்தவும் கார்ப்பரேட் ஊட கங்கள் நிதிஷ் குமாரின் அரசாங் கத்தின் வளர்ச்சியின் சாதனையே இதற்குக் காரணம் என்று சரடுவிட்டுக் கொண்டிருக்கின்றன.

வாக்கு மேலாண்மை

ஆளும் கூட்டணி, துன்பத்திலும், பாதிப்புக்கும் ஆளாகியுள்ள பெரும் பான்மையான மக்களிடையே சிறப்புத் தீவிரத் திருத்தம் உருவாக்கிய பாது காப்பின்மை உணர்வால் அதிகரித்த சாதி-வகுப்புவாத தாக்கத்தை ஒருங்கி ணைத்தது என்பது உண்மைதான். அமித் ஷாவுக்குக் கூறப்படும் ‘வாக்கு மேலாண்மை’ என்று அழைக்கப்படும் அம்சம், சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களை அழிக்க வழி வகுத்தது, மேலும் அவர்கள் பெற்ற வாக்குகள் ஆளும் கூட்டணியை நோக்கி முழுமையாக ஈர்க்கப்பட்டன. சில சிறிய கட்சிகள், இடங்களின் அடிப்படையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், அவற்றின் சதவீத வாக்கு கள் எதிர்க்கட்சிகளை மோசமாக பாதித் துள்ளன. பிரசாந்த் கிஷோரின் ஜன் சூரஜ் கட்சி அல்லது சீமாஞ்சலில்  ஏஐ எம்ஐஎம் (AIMIM)-இன் உயர்மட்ட பிரச் சாரம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

சுயபரிசோதனை அவசியம்

மேலே சொல்லப்பட்ட அனைத்தும், ‘இந்தியா கூட்டணி’யுடன் இணைந்த கட்சிகள் சுயபரிசோதனை செய்ய வேண்டியவைகளாகும். மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதித்த பல பிரச்சனைகள் இருந்தன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றாலும், ஆளும் கூட்டணியை பின்னுக்குத் தள்ள முடியும் என்பதை உறுதிசெய்ய, எதிர்க்கட்சிகள் அவர்கள் மீதான பொதுமக்களின் கருத்தைத் தூண்டத் தவறிவிட்டன. இன்னும் ஆழ மாக ஆய்வு செய்யப்பட்டு கூட்டாகக் கவ னிக்கப்பட வேண்டிய பல காரணிகள் உள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட இடதுசாரிக் கட்சிகள் அயராது உழைத்து கணிசமான வாக்குகளைப் பெற்றுள் ளன. ஆனால் அது அவர்களின் சட்ட மன்ற பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கை யில் பிரதிபலிக்கவில்லை. அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்த மக்களின் போராட்டங்களை மீண்டும் ஊக்குவிப்பதிலும், அதிகாரப்பூர்வ ஒத்துழைப்பு மற்றும் ஒட்டுமொத்த நவ-பாசிச வழிகளுடன் இந்துத்துவா-கார்ப்பரேட் படையெடுப்பிற்கு எதிரான இடைவிடாத அரசியல் பிரச்சாரத்திலும் எதிர்காலம் உள்ளது. ஒரு நியாயமான தேர்தல் முறை மற்றும் ஒரு நியாய மான ஜனநாயகத்திற்கான போராட்டம் அத்தகைய நிலையான போராட்டத் தைக் கோருகிறது.

நவம்பர் 19, 2025, 
தமிழில் : ச.வீரமணி