articles

img

“ஏன் இந்த வெறுப்பு உமிழ்வு?” - ஹரி

“ஏன் இந்த வெறுப்பு உமிழ்வு?” 

“என்னுடைய பெயர் ராஜாராம் மோகன்ராய். இந்தியாவில் இருந்து நான் வந்து இரண்டு நாட்களாகிவிட்டது. உங்கள் ஊரைச் சுற்றிப் பார்த்தேன். எங்குமே சாதிப் பிரிவினையைப் பார்க்க முடியவில்லை. இது உங்கள் ஆட்சி. இந்தியாவிலும் உங்கள் ஆட்சிதான். ஆனால் அங்கு மட்டும் சாதிப்பிரிவினைகள் தலைவிரித்து ஆடுகிறதே..” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே வார்த்தைகளில் சூடு ஏறியது. லண்டனில் கம்பெனியின் கூட்டத்தில் முதன்முறையாகக் கலந்து கொண்ட அவர் இப்படித்தான் தொடங்கினார். கம்பெனி விவகாரங்களைப் பற்றிப் பேசுவார் என்று காத்திருந்தவர்களுக்கு அவருடைய பேச்சு அதிர்ச்சியைத் தந்தது. 

இந்தியா திரும்பியபிறகு, ‘சங்பாத் கவுமுதி’ என்ற வார இதழைத் தொடங்கி அதில் பல்வேறு  கட்டுரைகள் வாயிலாகத் தன் கருத்துகளை முன்வைத்தார். சாதி அமைப்பைச் சாடினார். புத்தக்  கருத்துகள் அடங்கிய நூலான “பிரஜ்யாசுச்சி” இவ ரால் வங்க மொழியாக்கம் செய்யப்பட்டது. உடன்  கட்டை ஏறுதலுக்கு எதிராக 1818, 1819 இல் இரண்டு  நூல்களை எழுதினார். பத்திரிகைகளைகளை அச்சிட சிரமங்கள் ஏற்பட்டபோது அச்சுக் கூடத்தையே அமைத்தார். இந்தியாவில் செய்தித்  தாள்களை அச்சிட அச்சுக்கூடம் அமைத்த முதல்  இந்தியர் இவர்தான். சமூக அவலங்களை எதிர்க்க  முன்வந்தவர்களைக் கொண்டு ஒரு குழுவை உரு வாக்கினார். இந்து சமூகத்தில் சீர்திருத்தங்கள் வேண்டும்  என்று கோரி ஆத்மிய சபையை 1815 இல்  அமைக்கிறார். உடன்கட்டை ஏறுதல், சாதிப்பாகு பாடு, விதவை மறுமணம், பலதார மணம் உள் ளிட்டவை இந்த சபையில் விவாதிக்கப்படுகிறது. பல கடவுள்களின் இருப்பை ராஜாராம் மோகன் ராய் நம்பவில்லை. மனித குலத்துக்கு மதங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தனது கட்டு ரைகள், பேச்சுகள் மூலமாகச் சொன்னார். அனைத்து மதங்களிலும் சீர்திருத்தங்கள் அவசி யம் என்றார். பின்னர் பிரம்ம சமாஜம் தொடங்கினார். கல்வி 19ஆம் நூற்றாண்டில் மூன்று வகையான கருத்து கள் இருந்தன. ஒன்று, பழமையான வழக்கங்களை விடாமல் அவற்றின் அடிப்படையில் கல்வி. இரண்டாவது, மேற்கத்தியக் கல்வி மட்டுமே போது மானது. மூன்றாவது, இரண்டிலும் உள்ள  அம்சங்களை எடுத்துக் கொண்டு வருங்காலத் திற்கானது. மூன்றாவது வகையை முன்வைத்த வர்களில் ராஜாராம் மோகன் ராய் முதன்மை யானவர். சமஸ்கிருதப் பள்ளி ஒன்றை ஆங்கி லேய அரசு இந்தியப் பண்டிட்டுகளின் நிர்வாகத்தில்  தொடங்குகிறது என்று கேள்விப்பட்டவுடன் கொதித்  தெழுந்தார். “இந்த நாட்டை இருட்டிலேயே வைத்தி ருக்கத் திட்டமிட்டே இதைச் செய்கிறீர்கள்” என்று  தனது கடிதத்தில் சாடினார். இந்திய தேசியமாகட்டும்; மறுமலர்ச்சியா கட்டும்; நவீன இந்தியா குறித்த பயணத்தில், விவா தத்தில், பணியில், சிந்தனையில் ராஜாராம் மோகன்  ராய் இல்லாமல் அவை எதுவும் முழுமையடை யாது. நடப்பு சமூக, அரசியல், பொருளாதார, கல்விச் சூழல்களிலும் ராஜாராம் மோகன்ராய் பொருத்தமானவராகவே இருக்கிறார்.  அதனால்தான் அவர் மட்டுமல்ல, நாட்டில் மாற்  றத்தை ஏற்படுத்திய சீர்திருத்தவாதிகள் அனை வரையுமே இந்துத்துவ வெறியர்கள் எதிரிகளாகப் பார்க்கிறார்கள். மத்தியப் பிரதேச அமைச்சர் பர்மார், “வாய் தவறிச் சொல்லி விட்டேன்” என்கி றார். மீண்டும் அவர் சொன்னதைப் பார்த்தால், அவ ரது மறுப்பு பச்சைப் பொய் என்பது விளங்கும். 

தாய் சொல்லைத் தட்டு..!

ராஜாராம் மோகன்ராயின் மூத்த சகோதரர் இறந்தபோது, குடும்பத்தின் மொத்த சொத்தும் இவருக்கு வந்தது. ஆனால், அதற்கு எதிராக அவரது தாயார் அரசவையிலும், கம்பெனியின் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தார். தனது இரண்டாவது மகன், “மதத்திற்கு எதிரி” என்றும், “நாத்திகர்” என்றும் குற்றம் சாட்டினார். இந்த நிலையில் கூட, தந்தைக்குப் பிறகு தாய்க்கு சொத்து சென்று சேரவில்லையே என்றுதான் ராஜாராம் மோகன்ராய் கவலைப்பட்டிருக்கிறார்.

“ராஜாராம் மோகன்ராய் பிரிட்டிஷ் ஏஜண்ட். அவர் தரகராக வேலை பார்த்தார். மத மாற்றம் என்ற நச்சுச்சுழலை அவர் உருவாக்கினார் - மத்தியப்பிரதேச பாஜக அமைச்சர் இந்தர் சிங் பர்மார்

இந்தியாவின் நவீன யுகத்தை ராஜாராம் மோகன்ராய் தொடங்கி வைத்தார். அவர் இந்திய மறுமலர்ச்சியின் தந்தை. இந்திய தேசியத்தின் தீர்க்கதரிசி - ரவீந்திரநாத் தாகூர்“