articles

img

தப்பிச்சுது இந்தி சினிமா.. ஆனா..!

தப்பிச்சுது இந்தி சினிமா.. ஆனா..!

ஒன்றிய அமைச்சர் சிராக் பஸ்வான் மிலே நா மிலே ஹம் என்ற படத்தில் நடித்தார். நாடு முழுவதும் வெளியான அந்தப் படம் மொத்தத்தில் ஒரு கோடி ரூபாய் கூட வசூலாகாமல் படுத்துக் கொண்டது. பெரும் தோல்வியால் மும்பையில் இருந்த வேலையையும் விட்டு விட்டு பெட்டி படுக்கையோடு திரும்பினார். தந்தை ராம் விலாஸ் பஸ்வானின் வழியில் கட்சிக்குத் தலைவரானார். அண்மையில் நடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சியான லோக் ஜன் சக்தி(ஆர்.வி), கூட்டணியின் வெற்றிக்குப் பெரும் பங்கு அளித்திருக்கிறது.  தோல்வியடைந்த அந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் கங்கனா ரனாவத். அவர் தற்போது எம்.பி.யாக இருக்கிறார். இருவரிடமிருந்தும் பாலிவுட் தப்பித்தது. ஆனால், மக்கள் மாட்டிக் கொண்டு விட்டார்கள்.   என்னது...  காந்தி சுட்டாரா..? வரலாறுகளைப் பதிவு செய்வதில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது. பொதுவாகவே, வரலாற்று நிகழ்வுகளுக்கு பல கோணங்கள் இருக்கும். அது அரசியலாகவோ, கலாச்சாரம் சார்ந்தோ அல்லது மாறுபட்ட கருத்துகளாகவோ இருக்கும். இந்தக் கோணங்களை அலசுவதில் செயற்கை நுண்ணறிவு சிரமப்படுகிறது. விமர்சனப் பூர்வமான சிந்தனை அதற்கு இல்லை. வரலாற்றைப் பதிய விரும்புபவர் தன்னுடைய கோணத்திற்கு ஏற்றவாறு ஆய்வறிக்கையை கொண்டு செல்ல முடியும். வீடியோவே உருவாக்க முடியும். காந்தி சுடுவது போன்ற காட்சியைக்கூட செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கலாம்.  இத்தகைய அணுகுமுறையால் பாதிக்கப்படப்போவது சிறுபான்மைக் குரல்கள்தான். விளிம்பு நிலைக் குழுக்கள், பழங்குடியினர், ஆவணப்படுத்தப்படாத சமூகங்கள் உள்ளிட்டவை இடம் பெறாமலேயே போய்விடும் அபாயம் உள்ளது. வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் இது ஆழமான விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது