articles

img

பத்திரப் படுத்துதல் - இரா . தங்கப்பாண்டியன்

பத்திரப் படுத்துதல்

  முகம் சிரைக்காத பெரியவர் கையில் இருக்கிப் பிடித்தருக்கும் மஞ்சள் பையில் என்ன இருக்கும்...?  

  அடிக்கொரு தரம் தொட்டுப் பார்த்துக் கொள்ளும் கொய்யாப்பழக் கிழவியின் சுருக்கும் பையில் என்ன இருக்கும்.....?

  கால்ச்சட்டைப் பையிலிருந்து கையை எடுக்காத குழந்தையின் பாக்கெட்டில் என்ன இருக்கும்...?  

  கூந்தல் கலையா விட்டாலும் கண்ணாடி பார்த்து சரி செய்யும் வசந்தி மிஸ்ஸின் ஹேண்ட் பேக்கில் என்ன இருக்கும்…?

  சதா சர்வ காலமும் போராட்ட களத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் பெருமாள் தோழரின் ஜோல்னா பையில் என்ன இருக்கும்…?

  எதையும் எளிதில் தீர்மானிக்க முடியாவிட்டாலும் அவரவர் தனக்கானதை பத்திரப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள் சிலர் பொருட்களையும்….

   பலர் பதவி அதிகாரத்தையும்.....