articles

img

என்னது...  காந்தி சுட்டாரா..?

என்னது...  காந்தி சுட்டாரா..?

வரலாறுகளைப் பதிவு செய்வதில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது. பொதுவாகவே, வரலாற்று நிகழ்வுகளுக்கு பல கோணங்கள் இருக்கும். அது அரசியலாகவோ, கலாச்சாரம் சார்ந்தோ அல்லது மாறுபட்ட கருத்துகளாகவோ இருக்கும். இந்தக் கோணங்களை அலசுவதில் செயற்கை நுண்ணறிவு சிரமப்படுகிறது. விமர்சனப் பூர்வமான சிந்தனை அதற்கு இல்லை. வரலாற்றைப் பதிய விரும்புபவர் தன்னுடைய கோணத்திற்கு ஏற்றவாறு ஆய்வறிக்கையை கொண்டு செல்ல முடியும். வீடியோவே உருவாக்க முடியும். காந்தி சுடுவது போன்ற காட்சியைக்கூட செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கலாம்.  இத்தகைய அணுகுமுறையால் பாதிக்கப்படப்போவது சிறுபான்மைக் குரல்கள்தான். விளிம்பு நிலைக் குழுக்கள், பழங்குடியினர், ஆவணப்படுத்தப்படாத சமூகங்கள் உள்ளிட்டவை இடம் பெறாமலேயே போய்விடும் அபாயம் உள்ளது. வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் இது ஆழமான விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது