அட.. அப்புடியா..?
கால்பந்து சூப்பர் ஸ்டார் லயனல் மெஸ்சி கோல்களுக்கான உதவிகளில் 400 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளார். முன்னாள் பிரபல ஆட்டக்காரர் புஷ்காஸ் என்பவரின் 404 என்பதைத்தான் சாதனை என்கிறார்கள். ஆனால் அதற்கு எந்த சான்றுகளும் இல்லை. மெஸ்சியை விமர்சனம் செய்பவர்கள், குறிப்பாக மற்றொரு சூப்பர் ஸ்டாரான ரொனால்டோவின் விசிறிகள்தான் இந்த 404 என்பதைக் கிளப்பி விட்டார்களாம். 400ஐ மெஸ்சி தொடமாட்டார் என்று அவர்கள் நினைத்திருக்கிறார்கள். தொட்டுவிட்டார். “சரி விடுங்கப்பா.. புதுசா ஒருத்தர் இத விட அதிகமா அடிச்சாருன்னு ஒரு புரளியக் கிளப்புங்க.. அதையும் மெஸ்சி தாண்டிருவாரு” என்கிறார்கள் மெஸ்சியின் ரசிகர்கள்.
