முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார்!
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன் கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
அதன்பின் இவர் தவெகவில் இணையப்போவதாகச் செய்திகள் வெளியானது. இந்நிலையில் செங்கோட்டையன் நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இன்று விஜய் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.
